Published : 13 Jul 2017 10:42 AM
Last Updated : 13 Jul 2017 10:42 AM

ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்தது ஏன்? - அமெரிக்க அதிபரின் மகன் விளக்கம்

“ரஷ்ய வழக்கறிஞரைச் சந்தித்தது சாதாரண, ஒன்றுமில்லாத விஷயம்” என்று அமெரிக்க அதிபரின் மகன் ஜூனியர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 2016 நவம்பரில் நடை பெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். இதில் ட்ரம்ப் வெற்றி பெற்று அதிபரானார்.

தேர்தலுக்கு முன்பு ரஷ்ய வழக்கறிஞர் நடாலியாவை, டொனால்டு ட்ரம்பின் மகன் ஜூனியர் டொனால்டு ட்ரம்ப் நியூயார்க்கில் சந்தித்துப் பேசி னார். வழக்கறிஞர் நடாலியா ரஷ்ய அதிபர் மாளிகைக்கு மிகவும் நெருக் கமானவர் என்று கூறப்படுகிறது.

அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந் துள்ள நிலையில் ஜூனியர் டொனால்டு ட்ரம்ப், நடாலியா சந்திப்பு அமெரிக்காவில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.

இதுகுறித்து ஜூனியர் ட்ரம்ப் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஹிலாரியின் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் இருப்ப தாக வழக்கறிஞர் நடாலியா கூறியதால் அவரைச் சந்தித்தேன். சுமார் 20 நிமிடங்கள் அவரோடு பேசினேன். அவரிடம் எந்த ஆவணமும் இல்லை. எனது நேரம் மட்டுமே விரயமானது. அந்த சந்திப்பு சாதாரண, ஒன்றுமில்லாத விஷயம். நடாலியாவைச் சந்திப்பது குறித்து எனது தந்தை டொனால்டு ட்ரம்பிடம் தகவல் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குறிப்பிட்ட சில மின்னஞ்சல் கடிதங்களை ஜூனியர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள் ளார். “நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்காக இந்த மின்னஞ்சல் தகவல்களைப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறியபோது, ‘எனது மகன் நேர்மையானவன். மின்னஞ்சல் கடிதங்களை வெளியிட்டு தனது வெளிப்படைத்தன்மையை அவர் நிரூபித்துள்ளார்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

எனினும் ஜூனியர் ட்ரம்ப், ரஷ்ய வழக்கறிஞர் சந்திப்பு அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x