Published : 26 May 2014 09:44 AM
Last Updated : 26 May 2014 09:44 AM

பாலஸ்தீனத்தில் போப் ஆண்டவர்

பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை நகரமான பெத்லஹேமிற்கு போப்ஆண்டவர் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வந்தார்.

பாலஸ்தீன நிர்வாகத்தின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதன் மூலம் அந்நாட்டுக்கான அங்கீகாரத்தை போப் மறைமுகமாக அளித்துள்ளதாக அரசியல் நோக் கர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், ஜோர்டானைத் தொடர்ந்து பாலஸ்தீனம் பகுதியில் அமைந்துள்ள பெத்லஹேமிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். அவருக்கு மாங்கெர் சதுக்கத்தில் பாலஸ்தீனர்கள் வரவேற்பு அளித்தனர். அங்கு இயேசு கிறிஸ்து பிறந்ததாகக் கருதப்படும் இடத்தின் அருகே சிறப்புப் பிரார்த்தனையில் போப் ஈடுபட்டார்.

அதைத் தொடர்ந்து பாலஸ் தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடை யே காணப்படும் தீவிரமான மோதல் போக்கு குறித்து போப் பிரான்சிஸ் கூறும் போது “இந்நிலைக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. சர்வதேச அளவிலான அங்கீ காரத்தைப் பெறும் வகையில் இரு நாடுகளின் எல்லையை வரையறுக்க வேண்டும். அதற்காக இரு நாடுகளும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த பகுதியில் அனைவரின் உரிமையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்” என்றார்.

மறைமுக அங்கீகாரம்

இதற்கு முன்பு வந்த போப் ஆண்டவர்கள் அனைவரும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற பிறகுதான் பாலஸ் தீனத்தின் மேற்குக்கரை நகருக்கு வந்தார்கள்.

ஆனால், போப் பிரான்சிஸ் ஜோர்டானிலிருந்து நேரடி யாக மேற்குக்கரைக்கு வந்தார். அங்கு பாலஸ்தீன நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்டார். பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாஸை சந்தித்து பேசினார். இது தொடர்பாக பாலஸ்தீனப் பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவரும், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் அலுவலருமான ஹனான் அஷ்ரவி கூறுகையில் “போப் பிரான்சிஸ், இஸ்ரேல் வழியாக பாலஸ்தீனத்துக்கு வராமல் ஜோர்டானிலிருந்து நேரடியாக பாலஸ்தீனம் வந்துள்ளார். இதை பாலஸ்தீன நாட்டிற்கு போப் அளித்துள்ள மறைமுகமான அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளலாம்” என்றார். 2012-ம் ஆண்டு நவம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மேற்குக் கரை, காஸா, கிழக்கு ஜெருசலேம் ஆகியவற்றை உள்ளடக்கிய பாலஸ்தீனப் பகுதியை தனி நாடாகக் கருதும் வகையில், உறுப்பினரல்லாத பார்வையாளர் அந்தஸ்து அளிக்கப்பட்டது.

இந்த அங்கீகாரம் நடைமுறையில் முழுவதுமாக அமலாகவில்லை. 1967-ம் ஆண்டிலிருந்து கிழக்கு ஜெருசலேமையும், மேற்குக் கரை பகுதியையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x