Published : 18 Jan 2014 12:00 AM
Last Updated : 18 Jan 2014 12:00 AM

நாள்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ். தகவல்களை திருடிய அமெரிக்கா: பிரிட்டன் ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.) செல்போன்களில் இருந்து நாள்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ்.களை திருடியிருப்பதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. என்.எஸ்.ஏ. முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென்னின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி தி கார்டியன் நாளிதழ் மற்றும் சேனல் 4 செய்தி தொலைக்காட்சி ஆகியவை இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.

உலகம் முழுவதும் செல்போன்களில் இருந்து அனைத்துவிதமான தகவல்களையும் என்.எஸ்.ஏ. திருடியுள்ளது. இந்த தகவல்களை பிரிட்டன் உளவாளிகளுக்கும் என்.எஸ்.ஏ. அளித்துள்ளது. ஆனால் முழுமையான தகவல்களை அளிக்காமல் குறிப்பிட்ட சில தகவல்களை மட்டுமே பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

கிரெடிட் கார்டு குறித்து வங்கிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ். தகவல்களையும் என்.எஸ்.ஏ. திருடியுள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட கிரெடிட் கார்டு வங்கி வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்றங்கள் அவர்களின் எஸ்.எம்.எஸ். தகவல்கள் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளன. மேலும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி பணப் பரிமாற்ற தகவல் களும் கண்காணிக்கப்பட்டுள்ளன.

இதற்காக பல்வேறு நிறுவனங்க ளுடன் என்.எஸ்.ஏ. ரகசிய உடன் படிக்கை மேற்கொண்டிருந் ததாகத் தெரிகிறது. பிரிட்டனைச் சேர்ந்த ஜிசிஎச்கியூ என்ற அமைப்புடன் இணைந்து அந்த நாட்டு செல்போன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜிசிஎச்கியூ வெளி யிட்டுள்ள அறிக்கையில், பிரிட்டன் சட்டவிதிகளுக்கு உள்பட்டுதான் நாங்கள் செயல்பட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து என்.எஸ்.ஏ. வட்டாரங்கள் கூறியபோது, சட்டப்பூர்வமாகவே எஸ்.எம்.எஸ். தகவல்கள் திரட்டப்பட்டன, நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை, இதுதொடர்பாக வெளியான தகவல்கள் உண்மைக் குப் புறம்பானவை என்று தெரி வித்துள்ளது.

செல்போன்களில் இருந்து திரட்டப்பட்ட எஸ்.எம்.எஸ். தகவல் கள் டிஷ்பயர் என்ற பெயரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

என்.எஸ்.ஏ. அத்துமீறல்கள்

உலகம் முழுவதும் நாள்தோறும் 500 கோடி தொலைபேசி உரை யாடல்களை என்.எஸ்.ஏ. ஒட்டு கேட்டதாக அண்மையில் செய்தி வெளியானது. இதில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 35 நாடுகளின் தலைவர்களின் செல்போன் உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் உலக நாடுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் களில் ரகசியமாக சிப் சொருகி தகவல்கள் திருடப்பட்டது குறித்தும் அண்மையில் செய்தி வெளியானது. இந்தியாவில் ஒரு மாத காலத்துக்குள் அரசியல் நிலவரம், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி குறித்த திட்டங்கள் குறித்த 1350 கோடி தகவல்களை என்.எஸ்.ஏ. திருடியதாக ஸ்னோடென் ஏற்கெனவே ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

என்.எஸ்.ஏ.வின் அத்துமீறல்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கும் வேளையில் அதன்மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x