Last Updated : 27 Nov, 2015 10:11 AM

 

Published : 27 Nov 2015 10:11 AM
Last Updated : 27 Nov 2015 10:11 AM

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் முதல் கண்ணாடி பொருத்தப்பட்டது

விண்வெளியை ஆராய்வதற் காக நாசா உருவாக்கி வரும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் முதல் குவி ஆடி நேற்று வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

தொலைதூரத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்களை ஆய்வு செய்ய 1990-ம் ஆண்டு ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி விண் வெளியில் நிறுவப்பட்டது. அதற்கு மாற்றாக ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை வரும் 2018-ம் ஆண்டு நிறுவும் முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா ஈடுபட்டுள்ளது.

சுமார் ரூ.58,590 கோடி மதிப்பில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த தொலைநோக்கி மூலம் முன்னெப்போதும் இல்லாத வகை யில் மிக தூரத்திலுள்ள சிறிய கிரகங்களைக் கூட அவதானிக்க முடியும். மேலும், பால்வெளி புதிர்க ளுக்கும் விடை கிடைக்கலாம் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியில், 18 குவி ஆடிகள் உட்பட தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்படவுள்ளன. இதன் முதல் குவி ஆடியை விஞ்ஞானிகள் நேற்று பொருத்தினர்.

மேரிலேண்டில் உள்ள ஆய்வகத் தில், இதன் முதல் குவி ஆடி பொருத்தப்பட்டது. அறுகோண வடிவமுள்ள இந்த ஆடி சுமார் 40 கிலோ எடையுள்ளது. 1.3 மீட்டர் சுற்றளவு கொண்டது.

18 கண்ணாடிகளும் பொருத்தப் பட்ட பின்னர் அவரை 6.5 மீட்டர் அளவு கொண்ட பெரிய ஒரே ஆடியாக இணைந்து செயல்படும். அனைத்து ஆடிகளும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொருத் தப்பட்டு விடும் என எதிர் பார்க்கப்படுகிறது. வரும் 2018-ம் ஆண்டு, புவியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ., தொலைவில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நிறுத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x