Last Updated : 04 Jun, 2016 11:14 AM

 

Published : 04 Jun 2016 11:14 AM
Last Updated : 04 Jun 2016 11:14 AM

செம்மை காணுமா செர்பியா?- 16

நேட்டோ அமைப்பில் செர்பியா பல கசப்புகளை உருவாக்கியதைத் தொடர்ந்து அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் செர்பியாவுக்கு அளித்து வந்த நிதி உதவிகளை நிறுத்திக் கொண்டுவிட்டன. என்றாலும் ரஷ்யா, சீனா, கிரீஸ் ஆகிய நாடுகள் செர்பியாவுக்கு நிதி உதவிகளை அளிக்கத் தொடங்கின. என்றாலும் கி.பி. 2000-க்குப் பிறகு ஐரோப்பிய யூனியன், செர்பியாவுக்கான நிதி உதவியை ஓரளவு அதிகரித்தது. 2003-ல் அமெரிக்க உள்துறை அமைச்சர் காலின் பவல் செர்பியாவுக்கும், மான்டேனெக்ரோவுக்கான உறவுகள் ஒப்பந்தத்தைப் பின்பற்றுவதாக இருப்பதாக சான்றிதழ் அளித்தார். செர்பியா வைச் சேர்ந்த அரசியல் கைதிகளை அமெரிக்கா விடுதலை செய்தது. பின்னர் நிதி உதவிகளையும் அளிக்கத் தொடங்கியது.

இன்றளவும் பல பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறது செர்பியா. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

ட்ரீனா நதிக்கரைகளில் உள்ள சில பகுதிகளை போஸ்னியா, செர்பியா ஆகிய இரண்டுமே சொந்தம் கொண்டாடுகின்றன.

கொசோவாவைத் தனது பகுதி என்று செர்பியா கூற, தங்களை முழுவதும் சுயாட்சி பெற்ற பகுதியாக கொசோவா அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பை அல்பேனியா அரசு அங்கீகரித்திருக்கிறது.

தனியாகப் பிரிந்த பிறகும் அமைதி அடைய வில்லை செர்பியாவும் க்ரோவேஷியாவும். மேலோட்டமாக இவை தங்களுக்குள் அமைதி நிலவ வேண்டுமென்று கூறினாலும் நடப்பது வேறாகத்தான் இருக்கிறது.

தன் எல்லைக்குள் க்ரோவேஷியாவிலி ருந்து பொருள்கள் நுழையத் தடை விதித்தது செர்பியா. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 2015-ல் க்ரோவேஷியா ஓர் ஆணையை வெளியிட்டது. ‘’செர்பிய குடிமக்களும், செர்பிய கார்களும் எங்கள் எல்லைக்குள் நுழையக் கூடாது’.

2000-ல் மிலோசெவிக் காலத்திலிருந்தே இரு நாடுகளுக்கிடையே நிலவிய பகை மைக்குப் பிறகு இப்போது அந்த விரோதம் மீண்டும் உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது எனலாம்.

க்ரோவேஷியாவில் உற்பத்தி செய்யப் பட்ட பொருள்கள் எதுவுமே தனது நாட்டுக் குள் நுழையக் கூடாது என்பதில் செர்பியா தெளிவாக இருக்கிறது.

மிலோசெவிக் ஆட்சிக்குப் பிறகு இரு நாடுகளுமே சமரசத்துக்கு அவ்வப்போது முயன்றன. ஆனால் கூடவே கடுமையான வார்த்தைகளையும் ஒன்றுக்கெதிராக ஒன்று பேசிக் கொண்டிருந்தன.

2013-ல் க்ரோவேஷியா ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் ஆனது. செர்பியாவும் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக விருப்பம் தெரிவித்திருக்கிறது.

க்ரோவேஷியா அகதிகள் நேரடியாக செர்பியாவுக்குள் நுழைவதற்குப் பதிலாக மாசிடோனியாவை அடைந்து அங்கிருந்து செர்பியாவுக்குள் நுழைகிறார்கள்.

பதிலுக்கு செர்பிய அகதிகளும் க்ரோவேஷியாவுக்கு அனுப்பப்படுகி றார்கள். இதை க்ரோவேஷியப் பிரதமர் ஜோரான் மிலநோவிக் எதிர்க்கிறார். ‘’இந்த மக்களை ஹங்கேரிக்கு அனுப்பட்டுமே’’ என்கிறார் அவர்.

இதனிடையே மிலோசெவிக் சிறையில் மாரடைப்பால் மார்ச் 11, 2006 அன்று இறந்தார். நான்கு வருடங்களாக அவர் மீது நடந்து வந்த வழக்கின் தீர்ப்பு மேலும் சில மாதங்களில் வெளிவரும் என்ற நிலையில் அவர் இறந்திருந்தார்.

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் தனக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டி ருக்கிறது என்றும், மாஸ்கோவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் கூற, உலக நீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.

அவர் இயற்கையாக இறந்ததில் கணிச மானவர்களுக்கு வருத்தம்! அதே சமயம் செர்பியாவில் மிலோசெவிக் ஆதரவாளர்கள் இன்னமும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக ஒருவர் கூறியது - “மிலோசெவிக் ஹேக் நகரில் இறக்க வில்லை. அங்கு அவர் கொலை செய்யப்பட்டி ருக்கிறார்’’.

செர்பியாவின் அதிபர் போரிஸ் டாடிக் என்பவர் மிலோசெவிக்கை உறுப்பினராகக் கொண்ட சோஷலிசக் கட்சியின் எதிரி. ‘‘மிலோசெவிக்கின் இறப்புக்கு ஐ.நா. போர்க் குற்ற வழக்கு மன்றம்தான் பொறுப்பேற்க வேண்டும். எனினும் செர்பியா தொடர்ந்து சர்வதேச நீதிமன்றத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கும்’ என்று கூறியிருக் கிறார். மிலோசெவிக் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் என்கிற கருத்து செர்பியாவில் பரவலாக உள்ளது.

முன்பு யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக விளங்கிய க்ரோவேஷியாவில் சமீபத்தில் ஒரு பேச்சு வந்தது. மறைந்த ஜனாதிபதி ஃப்ரான்ஜோ டுட்ஜ்மேன் என்பவருக்கு சிலையை எழுப்பலாம் என்றனர் சிலர். யுகோஸ்லாவியாவிலிருந்து க்ரோவேஷியா தனி நாடாகப் பிரிவதற்குப் போரிட்டவர்களில் அவர் முக்கியமானவர்.

ஆனால் மிக அதிகமானவர்கள் வேறொருவருக்குதான் அங்கு சிலை எழுப்புவோம் என்று தீர்மானித்தார்கள். அவர் டிட்டோ. அதாவது நாட்டின் சுதந்திரத் திற்குப் போரிட்டவரைவிட அந்த நாட்டைப் பிற நாடுகளோடு இணைத்து ஆட்சி செய்த வருக்குதான் அங்கே அதிக மரியாதை நிலவுகிறது! டிட்டோ இறந்து முப்பது வருடங்களுக்குமேல் ஆகிறது. அவர் உருவாக்கிய யுகோஸ்லாவியா பிரிந்தும் சுமார் இருபது வருடங்கள் ஆகின்றன. என்றா லும் டிட்டோ என்றால் அத்தனை (முன்னாள்) யுகோஸ்லாவிய நாட்டு மக்களுக்கும் இன்னமும் பிரியம். பொதுவாக சர்வாதிகாரிகள் இப்படி மக்களின் அன்பைப் பெறுவது என்பது அரிதுதான்.

உள்ளூர் மக்கள் மட்டுமல்ல மேலை நாட்டு மக்களும் வேறொரு காரணத்துக்காக டிட்டோவை மதிக்கிறார்கள். உலக கம்யூனிஸத்துக்கே தான்தான் தலைமை என்பதுபோல் சோவியத் யூனியன் நடந்து கொணடபோது, இந்தப் போக்கை ஏற்க மறுத்தவர் டிட்டோ. ‘’எங்கள் நாட்டுக்கு எது தேவை என்பதை நாங்கள் தீர்மானித்துக் கொள்கிறோம்.

நான் விரும்பும் கம்யூனிஸம் என்பது என் நாட்டு நலனுக்கு அடுத்ததாகத்தான் இருக்கும்’’ என்றார்.

பெல்கிரேடில் உள்ள டிட்டோவின் மார்பளவுச் சிலைக்கு எதிராக நின்று பவ்யத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். பிற முன்னாள் யுகோஸ்லாவிய நாடுகளிலிருந்து செர்பியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்.

டிட்டோவின் ஆட்சியில் மத சகிப்புத் தன்மை பரவலாகவே இருந்தது. அப்போது நிலவிய மத சுதந்திரத்தை அதற்குப் பிறகு எப்போதுமே அந்த நாடுகள் கண்டதில்லை.

ஆக இன்றளவும் செர்பியா தன் ‘சகோதர’ நாடுகளுடன் பங்காளிச் சண்டை மனநிலையில்தான் இருந்து வருகிறது.

(அடுத்து சமீபத்தில் உலகையே கிடுகிடுக்க வைத்த நாடு)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x