Published : 11 May 2014 01:03 PM
Last Updated : 11 May 2014 01:03 PM

சீன ராணுவத்தில் ‘குரங்குப் பட்டாளம்’ : விமானப்படையில் இணைப்பு

சீன ராணுவம், தனது விமானப் படையில் பயிற்சியளிக் கப்பட்ட மாகாக் இன குரங்குகளைச் சேர்த்துள்ளது. பெய்ஜிங் அருகே உள்ளே ரகசிய விமானப்படைத் தளத்தில் இக்குரங்குப் படை பணியமர்த்தப்பட்டுள்ளது.

‘சீன ராணுவத்தின் ரகசிய ஆயுதம்’ என இந்தக் குரங்குப் படையை ராணுவ வீரர்கள் செல்ல அடைமொழியுடன் குறிப்பிடு கின்றனர்.

பெய்ஜிங் அருகேயுள்ள ரகசிய விமானப்படைக்கு பறவைகளால் பெரும் இடையூறு ஏற்படுகி றது. போர் விமானங்கள் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் பறவைகள் அவ்விமானங்களில் சிக்குவதால் விபத்து ஏற்படுகிறது.

அந்தப் பறவைகளை விரட்ட சீன ராணுவம் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் பயனில்லை. வெடிகளை வெடித்தும், பயமுறுத்தும் காக்கைகள் மூலமும் எல்லாவற் றுக்கும் மேலாக துப்பாக்கிகளால் சுட்டும் சீன ராணுவம் இப்பிரச்சி னைக்குத் தீர்வு காண முயன்றது. ஆனால், பறவைகளால் தொடர்ந்து சிக்கல் நீடித்தது.

இதையடுத்து, பறவைகளின் கூடுகளைப் கலைத்து எறிவதற்காக சீன ராணுவம் குரங்குகளுக்குப் பயிற்சியளித்து, அவற்றை ராணுவத்தில் இணைத்துள்ளது. மாகாக் இன குரங்குகளுக்கு இந் தப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர்களின் விசில் கட்டளைக்குக் கீழ்படியும் இந்த ‘குரங்கு வீரர்கள்’ அங்குள்ள மரங்க ளில் பறவைகளின் கூடு களைத் தேடிக் கண்டறிந்து அவற்றைப் பிரித்து வீசுகின்றன. இதனால், பறவைகள் வேறு இடங் களுக்கு இடம்பெயர வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது.

ஒரு குரங்குக்கு தலா 6 கூடுகள் வீதம் குறிப்பிட்ட நேரத்துக்குள் இந்தக் குரங்குப் படை 180 பறவைக் கூடுகளைப் பிய்த்து வீசிவிட்டது.

விலங்குகளை ராணுவ சேவைக்காகப் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. கடலில் வைத்திருக்கும் கண்ணி வெடிகளைக் கண்டறிய அமெரிக்க ராணுவம் டால்பின்களைப் பயன் படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நாய்கள், ராணுவம் மற்றும் காவல்துறையில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அமெரிக்கா மேற்கொண்ட ஒசாமா பின்லேடன் தேடுதல் வேட்டை யில், ஒசாமாவைக் கண்டறிய பெல்ஜியன் ஷெப்பர்டு இன நாய் கெய்ரோ முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x