Last Updated : 12 Mar, 2016 10:31 AM

 

Published : 12 Mar 2016 10:31 AM
Last Updated : 12 Mar 2016 10:31 AM

ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம்: பாகிஸ்தான் கடும் விமர்சனம்

நீண்டகாலமாக இழுபறியாக உள்ள காஷ்மீர் பிரச்சினைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள நிரந்தர உறுப்பு நாடு களின் வீட்டோ அதிகாரம்தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளது. வீட்டோ அதிகாரம் ரத்து செய்யப் பட வேண்டும் என்ற தன் நிலைப் பாட்டை அந்நாடு மீண்டும் வலி யுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு கவுன்சில் சீரமைப்பு தொடர்பாக ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோஹி பேசும்போது, “நீண்ட காலமாக இழுபறியாக இருக்கும் காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்மானத்தை வீட்டோ அதிகாரம்தான் தடுத்து நிறுத்தியது. இப்பிரச்சினையில் ஐ.நா. தீர்மானம் அமல் செய்யப்படு வதையும் வீட்டோ அதிகாரம் பாதிக் கச் செய்தது” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஐ.நா. ஆவணங்களின் படி, இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் விவகாரத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கச் செய்யும் அயர்லாந்தின் 1962-ம் ஆண்டு தீர்மானம் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா வால் வீட்டோ அதிகாரம் மூலம் தடுக்கப்பட்டது.

வீட்டோ அதிகாரத்துடனோ, அதிகாரமில்லாமலோ பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரை புதிதாக இணைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

முடிவெடுக்கும் விஷயத்தில் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்த அனுமதிப்பது என்பது, பாது காப்பு கவுன்சிலை மேலும் ஜன நாயக ரீதியாக வலுப்படுத்துவது, பிரதிநிதித்துவம், பொறுப் புடைமை ஆக்குவது போன்ற இலக்குக்கு முரணானது.

வீட்டோ அதிகாரம் குறித்து, பாதுகாப்பு கவுன்சில் சீரமைப்பு விவாதத்தின்போதே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதனை தனியாக ஒத்தி வைக்கக் கூடாது. இதனை புறக்கணிக்கவோ, ஒத்தி வைக்கவோ கூடாது. இதுபோன்ற முக்கியமான பிரச்சினையை ஒத்திவைப்பதை பாகிஸ்தான் ஒருபோதும் ஆதரிக்காது.

வீட்டோ அதிகாரம் நீக்கப்பட வேண்டும் என்பதே பாகிஸ்தானின் நிலைப்பாடு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத் தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சயீத் அக்பருதீன் பேசும்போது, “வீட்டோ அதிகாரம் இருக்க வேண்டும்.

புதிய நிரந்தர உறுப்பினருக்கும் அந்த அதிகாரம் தேவை. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான விவாதம் எதிர்காலத் தில் விவாதிக்கப்படலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x