Published : 06 Sep 2014 06:03 PM
Last Updated : 06 Sep 2014 06:03 PM

ஐஎஸ் தீவிரவாதிகளை ஒன்றிணைந்து முறியடிக்க நேட்டோ நாடுகள் சபதம்

ஐஎஸ் (இஸ்லாமிக் ஸ்டேட்) தீவிரவாதிகளை ஒன்றிணைந்து முறியடிக்க அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோவின் முக்கிய உறுப்பு நாடுகள் சபதம் ஏற்றுள்ளன.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விடுத்த வேண்டுகோளை ஏற்று நேட்டோ உறுப்பு நாடுகள் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அணி திரண்டுள்ளன.

எனவே இனி சிரியாவிலும், இராக்கிலும் தாக்குதல் நடத்தி வரும் ஜஎஸ் தீவிரவாதிகள் மீது நேட்டோ நாடுகள் தாக்குதலை தீவிரப்படுத்தும் என்று தெரிகிறது. அந்த தீவிரவா

திகளுக்கு நிதி கிடைக்கும் வழிகளை கண்டறிந்து அவற்றை தடுக்கவும் நேட்டோ நாடுகள் முடிவு செய்துள்ளன.

சிரியாவிலும், இராக்கிலும் அரசுக்கு எதிராக போராடி வரும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்க பத்திரிகையாளர்கள் இருவரை தலையை வெட்டி கொலை செய்ததுடன், அதனை வீடியோ எடுத்து வெளியிட்டது. இது அந்த தீவிரவாத இயக்கத்தின் மீதான அமெரிக்காவின் கோபத்தை அதிகரித்தது.

இதையடுத்து அவர்களை முற்றிலுமாக ஒழித்துவிட அமெரிக்கா முடிவெடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேல்ஸில் வியாழன், வெள்ளி ஆகிய இருநாட்கள் நடைபெற்ற நேட்டோ நாடுகள் மாநாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகள் விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இதில் பங்கேற்ற ஒபாமா, நேட்டோ நாடுகள் அனைத்தும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட அழைப்புவிடுத்தார். மத கொள்கைகளுக்கு மாறாக செயல்பட்டு வரும் அந்த தீவிரவாதிகளை அரபு நாடுகள் நிராகரிக்க வேண்டுமென்றும் ஒபாமா வலியுறுத்தினர்.

இதையடுத்து நேட்டோ கூட்டமைப்பின் முக்கிய நாடுகள் அனைத்தும் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்டனர்.

இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து ஏற்கெனவே அமெரிக்கா விமான தாக்குதலை நடத்தி வருகிறது. இது குர்து படைகளுக்கும், இராக் ராணுவத்தினருக்கும் பெருமளவில் உதவிகரமாக உள்ளது.

ஆனால் அல்-காய்தா, அல்-ஷெபாப் ஆகிய தீவிர இயக்க முக்கியத் தலைவர்களைக் கொன்று, அதனை முற்றிலுமாக முடக்கியதுபோல் ஐஎஸ் தீவிரவாதிகளையும் ஒழித்துவிட அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x