Published : 08 Nov 2016 08:57 AM
Last Updated : 08 Nov 2016 08:57 AM

உலக மசாலா: மர்ம பனி உருண்டைகள்!

கிழக்கு சைபீரியாவின் நைடா கிராமத்தில் அழ கான பனி உருண்டைகள் இயற்கையாகத் தோன்றி யுள்ளன. டென்னிஸ் பந்து அளவில் இருந்து கூடைப் பந்து அளவு வரை இந்தப் பனி உருண்டைகள் காணப் படுகின்றன. மனிதர்களால் செய்யப்பட்ட உருண்டை களைப் போல அத்தனை நேர்த்தியாக இருக்கின்றன. ‘என் வாழ்க்கையில் முதல் முறையாக இதுபோன்ற காட்சியைக் காண்கிறேன். வயதானவர்கள் கூட இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்றே கூறுகிறார்கள். எங்கள் கிராமமே ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது. சற்றுத் தள்ளித் தள்ளி இருந்த பனி உருண்டைகளை ஒரே இடத்தில் சேர்த்து வைத்திருக்கிறோம். நீண்ட கடற்கரை முழுவதும் பனி உருண்டைகள் இருக்கின்றன. காரணம் ஒன்றும் புரியவில்லை’ என்கிறார் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர். ‘பருவநிலை, காற்று, அலைகளின் தன்மை போன்றவை இதுபோன்ற பனி உருண்டைகளை உருவாக்கியிருக்கின்றன’ என்கிறார் ஆர்டிக், அண்டார்டிக் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த செர்கே லிசென்கோவ்.

மர்ம பனி உருண்டைகள்!

சீனாவின் ஷாங்காய் நகர் மால் ஒன்றில், ஆண்களுக்கான பிரத்யேக நர்சரி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் நீண்ட நேரம் ஷாப்பிங் செய்யும்போது, ஆண்களுக்குப் பொழுது போகாது என்பதால், மாலின் மூன்றாவது தளத்தில் கணவர்களுக்கான நர்சரி அமைக்கப்பட்டிருக்கிறது. பொழுது போக்குவதற்காகப் பத்திரிகைகள், தொலைக்காட்சிப் பெட்டி, ஓய்வெடுப்பதற்கு வசதியான இருக்கைகள் என்று வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பொதுவாகப் பெண்கள் துணிகளையும் அலங்காரப் பொருட்களையும் அதிக அளவில் வாங்குவதாகக் குற்றச்சாட்டு எங்கும் நிலவி வருகிறது. ஆனால் சீனாவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு, பெண்கள் தினசரி வாழ்க்கைக்குரிய அவசியமான வீட்டு உபயோகப் பொருட்களை அதிக அளவில் வாங்குகிறார்கள் என்றும், ஆண்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக அதிக அளவில் பொருட்களை வாங்குகிறார்கள் என்றும் தெரிவிக்கிறது.

இனியாவது பெண்கள் மீது குற்றம் சாட்டாமல் இருந்தால் சரி.

அமெரிக்காவின்

மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஏன் ஆர்பர் நகரில் ஜொனாதன் ரைட், தேவதைகளுக்கான சின்னஞ்சிறு வீடுகளை அமைத்து இருக்கிறார். தான் வசித்து வரும் நூற்றாண்டுப் பழமையான வீட்டை, 1993-ம் ஆண்டு புனரமைப்பு செய்தார். அப்போது வீட்டின் சுவர்களில் பல இடங்களிலும் தேவதைகளுக்கான சின்னஞ்சிறு வீடுகளை உருவாக்கினார். கதவைத் திறந்தால் நிஜ வீடு போல, அனைத்து விஷயங்களும் இருக்கின்றன. இந்த வீடுகளைக் குழந்தைகள் மிகவும் விரும்பினர். பின்னர் நகரின் பல பகுதிகளிலும் தேவதை வீடுகளை உருவாக்கினார். மக்கள் அதிகம் வரக்கூடிய காபி ஷாப், மளிகைக் கடை, பொம்மை கடை போன்றவற்றில் இருந்த தேவதை வீடுகளைப் பார்த்து, எல்லோரும் மகிழ்ந்து போனார்கள். காலப்போக்கில் தேவதைகளுக்காகக் குழந்தைகள் பரிசுப் பொருட்கள், இனிப்புகள், தொப்பிகள், நாணயங்கள், கடிதங்கள் போன்றவற்றை இந்த வீடுகளின் முன்பு வைத்துச் செல்ல ஆரம்பித்தனர். சில இடங்களில், ‘தேவதைகள் ஏற்கெனவே நன்றாகச் சாப்பிட்டு விட்டனர். நீங்கள் வைக்கும் உணவுப் பொருட்களை எறும்புகள்தான் சாப்பிடுகின்றன. அதனால் உணவுகளை வைக்க வேண்டாம்’ என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டிருக்கிறது. தேவதை வீடுகள் சான் பிரான்சிஸ்கோ, நியுயார்கிலும் பரவ ஆரம்பித்துவிட்டன.

தேவதை வீடுகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x