Published : 16 Jul 2015 10:40 AM
Last Updated : 16 Jul 2015 10:40 AM

உலக மசாலா: பாம்பு ஃப்ரண்ட்!

இங்கிலாந்தில் வசிக்கிறார் ராப் கவான். இவர் ஒரு பாம்பு ஆர்வலர். 19 பாம்புகளை வளர்த்து வருகிறார். அதிலும் ஆஸ்டின் என்ற மஞ்சள் நிற மலைபாம்புதான் அவரது செல்லப் பிராணி. 82 கிலோ எடை கொண்ட ஆஸ்டின் பிறந்து 10 மாதங்களே ஆகின்றன.

ஆஸ்டினின் நெருங்கிய தோழி ராப்பின் இரண்டு வயது அலிஷா மே. ஆஸ்டினையும் அலிஷாவையும் தன் மகன், மகள் போலவே வளர்த்து வருகிறார் ராப். 15 அடி நீளம் கொண்ட ஆஸ்டின் தோட்டம், வீடு என்று எங்கும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறது. அலிஷாவோ தினமும் ஆஸ்டின் பாம்புக்கு முத்தம் கொடுத்து, குட்நைட் சொல்லிவிட்டுத்தான் தூங்கச் செல்கிறாள்.

கொஞ்சம் நடுங்கத்தான் செய்யுது ராப்…

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 19 வயது பாடகர் ஜேம்ஸ் மெக்எல்வர். ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, லண்டனிலிருந்து கிளாஸ்கோவுக்குச் செல்வதற்காக விமான நிலையம் வந்தார். அவருடைய குழுவினர் ஏற்கெனவே விமானத்துக்குள் சென்று விட்டனர். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக எடை வைத்திருந்தார். அதற்காக அதிகமாகப் பணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் ஜேம்ஸிடம் பணம் இல்லை. நண்பர்களும் அருகில் இல்லை.

என்ன செய்வது என்று யோசித்தார். வேகமாகக் குளியலறைக்குச் சென்றார். ஒவ்வொரு துணியாக எடுத்து, ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் போட்டுக்கொண்டார். இப்படி 12 சுற்றுத் துணிகளைச் சுற்றிக்கொண்டார். 6 சட்டைகள், 4 டிசர்ட்கள், 3 ஜீன்ஸ், 2 கால் சட்டைகள், ஒரு கோட், 2 தொப்பிகள் இவற்றில் அடக்கம். அவரால் இயல்பாக நடக்க முடியவில்லை. விமானத்தில் ஏறி, தன் இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் அவரது உடல் வெப்பத்தால் கொதிக்க ஆரம்பித்தது. கிளாஸ்கோ விமான நிலையத்தில் ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் ஜேம்ஸ்.

ஐயோ… பாவமே…

ஜப்பானில் கொசுக்களை ஒழிப்பதற்கு ஸ்ப்ரே, வலை என்று என்னெ ன்னவோ பயன்படுத்திப் பார்த்துவிட்டனர். ஆனால் முற்றிலுமாகக் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை. பிபி லேப் என்ற நிறுவனம் கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் புதிய வகை ஆடைகளை உருவாக்கியிருக்கிறது. இந்த ஆடை தலை முதல் கால் வரை, உடலைச் சுற்றி மூடிவிடுகிறது.

இந்த ஆடைய அணிந்துகொண்டு வீட்டிலும் இருக்கலாம், வெளியிலும் செல்லலாம் என்பது கூடுதல் சிறப்பு. மென்மையான ஆடை முழுவதும் மிகச் சிறிய துளைகள் இருப்பதால் சுவாசிக்கவும் எளிதானது. கை, கால், தலை என்று ஒவ்வொரு பகுதிக்கும் தனித் தனி ஜிப்கள் தைக்கப்பட் டிருக்கின்றன. வேகமாகப் பிரிக்கலாம், மடக்கலாம். மூன்று வண்ணங் களில் கிடைக்கின்றன. இந்த ஆடையின் விலை 3,400 ரூபாய்.

கொசுத்தொல்லைக்கு இது நிரந்தர தீர்வாக இருக்குமா…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x