Published : 16 Oct 2016 11:33 AM
Last Updated : 16 Oct 2016 11:33 AM

உலக மசாலா: பாட்டிகளால் புகழ்பெற்ற உணவகம்!

பிரான்ஸில் வசிக்கும் புரூனோ கெயர் பூச்செடிகள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார். ஆனால் பூச்செடிகளை விட செடிகளுக்குத் தண்ணீர் விடும் பூவாளிகள்தான் ஏராளமாக இருக்கின்றன. இந்தப் பூவாளிகள் எல்லாம் விற்பனைக்கானவை அல்ல. ‘என்னிடம் 800 பூவாளிகள் இருக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்பு என் சகோதரி, கிறிஸ்துமஸுக்குப் பூவாளி ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். ஒரு செடிக்குத் தண்ணீர்விட பூவாளி எவ்வளவு முக்கியமானது என்று புரிந்தது. அன்றுமுதல் எங்கே பூவாளியைப் பார்த்தாலும் வாங்கி வந்துவிடுவேன். சிலர் அவர்களாகவே பூவாளிகளைக் கொண்டுவந்து, அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள். கடையின் உட் சுவர்கள், தரை, கூரை, வெளிச் சுவர்கள் என்று எல்லா இடங்களிலும் பூவாளிகள் நிரம்பிவிட்டன. இனி எங்கே மாட்டுவது என்று யோசித்தபோது, தோட்டம் கண்ணில்பட்டது. செடிகள், மரங்கள் மீது பூவாளிகளைத் தொங்கவிட்டுவிட்டேன். என் கடையைப் பார்ப்பவர்கள், பூவாளி விற்பனை செய்கிறேன் என்றே நினைக்கிறார்கள். ஆனால் ஒருவருக்கும் இதுவரை விற்றதில்லை. கடைக்கு வரும் குழந்தைகள், ஆலிஸ் இன் ஒண்டர்லாண்டில் வரும் வீடு மாதிரியே இருப்பதாக ஆச்சரியப்படுகிறார்கள். தற்போது நான் பூவாளிகள் வாங்குவதை நிறுத்திவிட்டேன். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், பழைய பூவாளிகளை எல்லாம் என் கடை முன் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். ஒவ்வொன்றையும் இடம் பார்த்து வைப்பதுதான் சவாலாக இருக்கிறது’ என்கிறார் புரூனோ கெயர்.

பூவாளிகளின் காதலர்!

அமெரிக்காவின் நியூயார்க்கில் இனோடெகா மரியா என்ற உணவகத்தில் முழுக்க முழுக்க பாட்டிகள்தான் உணவுகளைத் தயாரிக்கிறார்கள். இங்கே தொழில்முறை சமையல் கலைஞர்களைப் பயன்படுத்துவதில்லை. பாட்டிகள் சமைப்பதாலும் அற்புதமான சுவைகளில் உணவுகள் கிடைப்பதாலும் இந்த உணவகம் பிரபலமாகிவிட்டது. ‘12 ஆண்டுகளுக்கு முன்பு என் பாட்டி, அம்மா, தங்கை என்று வரிசையாக இறந்துபோனார்கள். மிகவும் மனம் உடைந்து போனேன். அப்போதுதான் இத்தாலியில் இல்லத்தரசிகளை வைத்து ஒருவர் உணவகம் நடத்தும் செய்தியைப் படித்தேன். பாட்டிகளை வைத்து உணவகம் நடத்தும் யோசனை உதித்தது. உடனே செயலில் இறங்கிவிட்டேன். ஆர்வமுள்ள பாட்டிகளை வேலையில் சேர்த்தேன். பாலஸ்தீனம், செக் குடியரசு, அர்ஜெண்டினா, நைஜீரியா, அல்ஜீரியா என்று உலகம் முழுவதிலுமுள்ள 30 பாட்டிகள் இன்று எங்கள் உணவகத்தில் வேலை செய்கிறார்கள். அதனால் எந்த வகை உணவுகளைக் கேட்டாலும் எங்களால் செய்து கொடுக்க முடிகிறது. இன்றைய உணவு முதல் நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த உணவுகள் வரை இங்கே செய்து தருகிறோம். பாட்டிகளுக்குள் போட்டி இருக்கும். தினமும் யார் பிரமாதமாகச் சமைக்கிறாரோ, அவருக்கு மரியாதை செய்வோம். தங்களால் இந்த வயதிலும் அற்புதமாகச் சமைக்க முடிகிறது என்பதும் சம்பாதிக்க முடிகிறது என்பதும் பாட்டிகளை உற்சாகப்படுத்துகிறது’ என்கிறார் உரிமையாளர் ஸ்காரவெல்லா.

பாட்டிகளால் புகழ்பெற்ற உணவகம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x