Published : 07 Jan 2017 09:54 AM
Last Updated : 07 Jan 2017 09:54 AM

உலக மசாலா: பனிக்கட்டி சிற்பங்களிலும் அசத்துகிறார்கள் சீனர்கள்!

சீனாவின் ஹார்பின் நகரில் ஆண்டுதோறும் பனிச் சிற்பங்கள் திருவிழா நடைபெறுகிறது. உலகிலேயே மிகப் பெரிய, தனித்துவ மிக்கப் பனிச் சிற்பங்கள் இங்கேதான் இருக்கின்றன. அருகில் இருக்கும் சோங்ஹுவா நதியில் இருந்து பனிக்கட்டிகள் வெட்டி எடுத்து வரப்பட்டு, சிற்பங்களாக வடிக்கப்படுகின்றன. விலங்குகள், பறவைகள், ராட்சச கோட்டைகள், உலகப் புகழ்பெற்ற சின்னங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் என்று விதவிதமான சிற்பங்களும் கட்டிடங்களும் பிரமிப்பூட்டுகின்றன. இந்த ஆண்டு 1,115 அடி நீளமுள்ள பனியால் உருவாக்கப்பட்டுள்ள சறுக்கு மரம் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. 500 மனிதர்களின் உழைப்பில் இந்தப் பனிச் சிற்பங்கள் உருவாகியிருக்கின்றன. ஹார்பின் நகரில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பனிச் சிற்பத் திருவிழா, மார்ச் மாதம் வரை நடைபெறும். உலகம் முழுவதிலுமிருந்து பனிச் சிற்பங்களைப் பார்வையிடுவதற்காக ஒன்றரை கோடி பேர் வர இருக்கிறார்கள். நான் 20 ஆண்டுகளாகப் பனிச் சிற்பங்களை மிகவும் மகிழ்ச்சியோடு செதுக்கி வருகிறேன். மக்கள் பார்த்து சந்தோஷப்படும்போது இந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும்” என்கிறார் சிற்பக் கலைஞர் லு.

பனிக்கட்டி சிற்பங்களிலும் அசத்துகிறார்கள் சீனர்கள்!

ஆரோக்கியமான

உணவுகள் சுவை குன்றியதாக இருக்கும் என்பதை மாற்றியமைத்திருக்கிறார் இத்தாலியைச் சேர்ந்த இதய நோய் மருத்துவர் வலெரியோ சங்குய்னி. இவர் உருவாக்கிய ஆரோக்கிய ஐஸ்க்ரீமில் சுவையும் பிரமாதமாக இருப்பதோடு, புத்துணர்வையும் அளிக்கிறது. “இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு, சில நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொண்டால் மனித வாழ்நாள் அதிகரிக்கும் என்பது மருத்துவத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தாலியர்களின் உணவுகளில் ஆலிவ் ஆயில், தக்காளி, சிவப்பு ஒயின் போன்றவை அதிகம் சேர்க்கப்படுகின்றன. இவை இத்தாலியர்களின் வாழ்நாட்களை நீட்டித்திருக்கின்றன. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நூறு வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidant) அதிகம் உள்ள உணவுகள் சமைக்கப்பட்டு, உணவு மேஜைக்கு வருவதற்குள் கணிசமான அளவில் சக்தியை இழந்துவிடுகின்றன. மிகக் குறைவான வெப்பத்தில் பாதுகாக்கப்படும் பொருட்களில் சத்துகளின் இழப்பு குறைவாக இருப்பதால் இந்த ஐஸ்க்ரீமை உருவாக்கியிருக்கிறேன். இனிப்பில்லாதா கோகோ, ஜாதிபத்ரி, க்ரீன் டீ மூன்றிலும் அதிக அளவில் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றை வைத்து ஐஸ்க்ரீமைத் தயாரித்திருக்கிறேன். ரோம் பல்கலைக் கழகத்தில் பரிசோதனை செய்து பார்த்ததில் சாதாரண ஐஸ்க்ரீம் களைச் சாப்பிட்டவர்களைவிட என்னுடைய ஐஸ்க்ரீம்கள் சாப்பிட்டவர் கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தனர். ரத்தநாளங்கள் வேலை செய்வதில் முன்னேற்றம் இருந்ததால் அவர்களின் உடல் நலம் மட்டுமின்றி, மன அழுத்தம் குறைந்து மன நலமும் பாதுகாக்கப்படுவது தெரியவந்தது” என்கிறார் வலெரியோ.

ஆயுளை நீட்டிக்கும் ஐஸ்க்ரீம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x