Published : 31 May 2015 11:39 AM
Last Updated : 31 May 2015 11:39 AM

உலக மசாலா: உலகத்துக்கு நியாயம் சொல்றவங்களுக்கு யார் எடுத்துச் சொல்றது?

62 வயது மிடானி ஹிசாவோ ஜப்பானில் வசிக்கிறார். இவருக்குக் குழந்தை இல்லை. 19 ஆண்டுகளுக்கு முன், ஒரு செல்லப் பிராணிகள் விற்பனை கடையில் இருந்து 5 செ.மீ. அளவே இருந்த ஓர் ஆமையை அவரது மனைவி வாங்கி வந்தார். மிடானியும் அவரது மனைவியும் ஆமைக்கு போன் சான் என்று பெயரிட்டு, தங்கள் மகன் போலவே வளர்த்து வந்தனர். ஒருகட்டத்தில் மனைவி இறந்து போனார். இன்று போன் சான் 70 கிலோ அளவுக்குப் பெரிய குழந்தையாகிவிட்டது. வாரத்துக்கு 3 முறை போன் சானை வெளியில் அழைத்துச் செல்கிறார் மிடானி. ஒரு பையில் கேரட், முட்டைக்கோசு, ஒரு பாட்டில் தண்ணீருடன் கிளம்புகிறார். சின்னஞ்சிறு குழந்தைகளை, போன் சான் முதுகில் அமர வைக்கிறார் மிடானி. குழந்தையைச் சுமந்துகொண்டு சந்தோஷமாக நடக்கிறது போன் சான். களைப்பு ஏற்படும்போது கேரட்டையும் கோஸையும் சாப்பிடுகிறது. “பார்க்கச் சாதுவாகத் தெரிந்தாலும் இவன் குறும்புக்காரன். பெண்களைக் கண்டால் பாதை மாறி, அவர்கள் பின்னாலேயே சென்றுவிடுவான்’’ என்கிறார் மிடானி.

நல்ல மகன்… நல்ல அப்பா!

அமெரிக்காவின் சிகாகோ சிறையில் வசிக்கிறார் 17 வயது லாமண்ட் கதே. கூடைப்பந்து வீரராக இருந்த லாமண்ட், ஒரு பிஸா கடையில் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் சிறைக்குள் வந்தார். இங்கே வந்த பிறகு அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. நிலைமை மோசமாகும் போதெல்லாம் கையில் கிடைக்கும் உலோகங்கள், தோல் பொருட்கள் போன்றவற்றை விழுங்கிவிடுவார். பொருட்கள் இல்லை என்றால் சிறை கேமராவை உடைத்து, முழுங்கி விடுவார். 24 முறை அறுவை சிகிச்சை செய்து, பொருட்களை வெளியே எடுத்திருக்கிறார்கள். இதற்காக 8 கோடிக்கும் அதிகமான பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட காலம் மன அழுத்தத்தில் இருந்த லாமண்ட்டுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கவில்லை. அதனால்தான் மனஅழுத்தம் இவ்வளவு மோசமான நிலைக்கு வந்துவிட்டது என்கிறார் சிறை அதிகாரி.

உலகத்துக்கு நியாயம் சொல்றவங்களுக்கு யார் எடுத்துச் சொல்றது?

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில், லடா 65 என்ற ஓவியப் பயிற்சிப் பட்டறை நடந்தது. இது தெரு ஓவியங்களுக் கான பயிற்சிப் பட்டறை. இதில் கலந்துகொண்ட 100 பேரும் முதியவர்கள். எல்லோரும் மகிழ்ச்சியுடன் வண்ணங்களைத் தீட்டித் தள்ளிவிட்டனர். லாரா பெப்பில் ரோட்ரிகுயஸ் என்பவர்தான் லடா 65 என்ற அமைப்பை உருவாக்கியவர். முதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கவும், வயதாகிவிட்டது என்ற சிந்தனையை மாற்றவும் இந்த அமைப்பை உருவாக்கியதாகச் சொல்கிறார். இந்த ஓவியப் பயிற்சியின் மூலம் பழைய உற்சாகம் திரும்பிவிட்டது, வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் முதியவர்கள்.

வெல்டன் லாரா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x