Published : 06 Jan 2017 10:05 AM
Last Updated : 06 Jan 2017 10:05 AM

உலக மசாலா: அட்டகாசமாக இருக்கிறது சிலை!

முதல் உலகப் போர் முடி வடைந்து நூற்றாண்டு நிறைவுக்காக, இங்கிலாந்தில் பிரம்மாண்டமான போர் வீரர் ஒருவரின் உருவம் வடிவமைக் கப்பட்டிருக்கிறது. பழைய இரும்புப் பொருட்கள், தகரம், தொழிற்சாலையில் வீணாகும் உலோகக் கழிவுகள் போன்ற வற்றை வைத்து மிக நேர்த்தி யாகச் சிலையை உருவாக்கி யிருக்கிறார் மார்டின் கல்பாவி. 20 அடி உயரம் கொண்ட இந்தச் சிலையை 3 மாதங்களில் செய்து முடித் திருக்கிறார். “என் வாடிக்கை யாளர் ஒருவருக்காகச் செய்திருக்கிறேன். பார்ப்பதற்கு பழைய இரும்புப் பொருட்களை வைத்து உருவாக்கிய சிலை என்று சாதாரணமாகத் தோன்றும். ஆனால் இதை உருவாக்குவது மிகவும் கடினம். பல்லாயிரக்கணக்கான இரும்புப் பொருட்களால் ஆனது இந்தச் சிலை. ஒவ்வொரு பொருளும் விழாமல் இருப்பதற்குக் கம்பிகளால் இணைத்திருக்கிறேன். பார்ப்பவர்கள் எல்லோரும் போரில் இருக்கும் ஒரு வீரரின் முகம் எப்படி இருக்குமோ, அப்படியே இருக்கிறது என்கிறார்கள். விரைவில் முதல் உலகப் போர் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சிக்கு இந்தச் சிலை சென்றுவிடும்” என்கிறார் மார்டின்.

அட்டகாசமாக இருக்கிறது சிலை!

மெல்பர்ன் நகரில் ஒரு குடியிருப்புவாசி, தன்னுடைய வீட்டு உரிமையாளர் மீது கொடுத்துள்ள புகார் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ‘வீட்டு வாடகையுடன் தண்ணீருக்கான கட்டணத்தையும் சேர்த்துக் கொடுத்து விடுகிறேன். அப்படியிருந்தும் ஒவ்வொரு முறை கழிவறையைப் பயன்படுத்தும்போதும் நாணயத்தைப் போட்டால்தான் தண்ணீர் வரும் என்ற நிலை சட்டத்துக்குப் புறம்பானது. அரசாங்கம் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தச் சொல்கிறது. வீட்டு உரிமையாளர் தண்ணீர் சிக்கனத்துக்காக ஒவ்வொரு முறையும் நாணயம் போடச் சொல்வது அநியாயம். இந்த விஷயம் என்னை மனரீதியாக மிகவும் பாதித்திருக்கிறது. என் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இது எவ்வளவு பாதிக்கும்?’ என்று புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அடப் பாவமே!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் அடர் பனிப் பொழியும் அதிகாலை நேரத்தில், திறந்தவெளி கால்பந்து மைதானத்தில் மாணவர்கள் பரீட்சை எழுதியிருக்கிறார்கள். கடுங்குளிரில், தாளில் எழுதுவதைக் கூட பார்க்க முடியாத இருளில் மாணவர்கள் தவித்தனர். இதைச் சகிக்க முடியாத பெற்றோர்கள், இந்தக் காட்சிகளைப் படங்களும் வீடியோக்களுமாக எடுத்து வெளியிட்டுவிட்டனர். உடனடியாக பிரின்சிபல் ஜிஷெங் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பரீட்சை நடைபெற்ற நாள், அளவுக்கு அதிகமாகப் பனிப் பொழிவு இருக்கும் என்பதால் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் மாணவர்களை அழைத்து 4 மணிநேரம் பனியில் அமர வைத்து, பரீட்சை எழுத வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியதோடு, பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்புதான் மிக முக்கியம் என்றும் சீனக் கல்வித் துறை அறிவுரை வழங்கியிருக்கிறது. ஜிஷெங் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இப்படியும் சில மனிதர்கள்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x