Published : 02 Aug 2016 10:54 AM
Last Updated : 02 Aug 2016 10:54 AM

உலக மசலா: நவீன குகை மனிதன்!

அர்ஜென்டினா காடுகளில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார் 79 வயது பெட்ரோ லூகா. தாகம் எடுத்தால் ஓடைகளில் வரும் நீரைப் பருகுகிறார். பசி எடுத்தால் வேட்டையாடுகிறார். பெரிய குகையில் வாழும் லூகாவுக்கு 2 ஆடுகளும் 11 சேவல்களும்தான் துணை.

"ஆடுகளும் சேவல்களும் பகல் முழுவதும் காடுகளில் சுற்றிவிட்டு, இரவில் குகைக்குத் திரும்புகின்றன. குகையில் நெருப்பை மூட்டி, புகையை உண்டாக்குவேன். கொடூர விலங்குகள் நெருப்பைக் கண்டவுடன் விலகிச் சென்றுவிடுகின்றன. எனக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. மாதம் ஒருமுறை நகருக்குச் சென்று, தேவையானப் பொருட்களை வாங்கி வருவேன். காட்டுக்குள் வெகு தூரம் நடந்தால்தான் குகைக்கு வர முடியும். அதனால் பெரும்பாலும் மனிதர்கள் வருவதில்லை.

எப்போதாவது சுற்றுலாப் பயணிகள், ஆராய்ச்சியாளர்கள் வந்து செல்கிறார்கள். சிறிய ரேடியோ ஒன்றுதான் என்னிடம் இருக்கும் ஒரே தொழில்நுட்பக் கருவி. இங்கே சிக்னல் கிடைக்காததால் அதுவும் வேலை செய்யாது. அதிகாலை 3 மணிக்கே சேவல்களும் காகங்களும் எழுப்பிவிடுகின்றன. கடுமையான குளிரை என்னால் இந்த வயதிலும் சமாளிக்க முடிகிறது. கால்நடையாகவே ஐரோப்பா முழுவதும் சுற்றி வரலாம் என்று நினைப்பேன். ஆனால் நடுவில் இருக்கும் கடலை எப்படிக் கடப்பது என்று விட்டுவிட்டேன். கடினமான வாழ்க்கையாக இருந்தாலும் இந்தக் குகை வாழ்க்கைதான் எனக்குப் பிடித்திருக்கிறது" என்கிறார் லூகா.

நவீன குகை மனிதன்!

*

ஆரோக்கியமானதாகவும் சுவையானதாகவும் உலகம் முழுவதும் கருதப்படும் காய்களில் ஒன்று வெங்காயம். வெங்காயத்தின் அற்புதமான சுவைக்காக ஏராளமாகக் கண்ணீர் விடவேண்டியிருக் கிறது. சமையலறைகளில் கண்ணீர் விடும் காட்சிக்கு முடிவு கட்டி யிருக்கிறது ஜப்பானிய நிறுவனம். ஹவுஸ் ஃபுட்ஸ் க்ரூப் கண்ணீர் வரவழைக்காத வெங்காயத்தை முதல் முறை உலகத்துக்கு அறிமுகம் செய்திருக்கிறது. இந்த வெங்காயத்தின் பெயர், ‘ஸ்மைல் பால்’. வெங்காயங்களை உரிக்கும்போதும் நறுக்கும்போதும் கண்ணீர் வராது,

முகத்தில் புன்னகைத் தவழும் என்பதால் இந்தப் பெயர். 20 ஆண்டுகளாகச் செய்த ஆராய்ச்சிகளின் பலனாக இந்த வெங்காயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். வெங்காயத்தை நறுக்கும் போது அதிலுள்ள உயிரணுக்கள் சேதமடைந்து, எளிதில் ஆவியாகின் றன. இவை நம் கண்களைத் தாக்கி, கண்ணீரை வரவழைக்கின்றன. வெங்காயத்தின் சுவைக்கோ, ஆரோக்கியத்துக்கோ பாதிப்பு இல்லாமல், கண்ணீர் வரவழைக்கும் நொதிகளின் சக்தியை மட்டும் குறைத்திருக் கிறார்கள். 2002-ம் ஆண்டு இந்த ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டு, வியாபார ரீதியில் கண்ணீர் வரவழைக் காத வெங்காயங் களை உருவாக்கும் எண்ணம் இல்லை என்று கூறியிருந்தனர்.

தற்போது பரிசோதனை முறையில் 500 கிலோ வெங்காயங்களை, ஜப்பானிய கடைகளில் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். இந்த வெங்காயங்களை நறுக்கும்போதோ, பச்சையாகச் சாப்பிடும்போதோ கண்ணீர் வரவில்லை. சாதாரண வெங்காயங்களை விட 3 மடங்கு விலை அதிகம். இந்த வெங்காயங்களை மக்கள் எப்படி அங்கீகரிக் கிறார்கள் என்பதை வைத்தே, இவை உலகச் சந்தைக்கு வருவது குறித்து தீர்மானிக்க முடியும் என்கிறது ஹவுஸ் ஃபுட்ஸ் க்ரூப்.

அட, சிரிக்க வைக்கும் வெங்காயங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x