Published : 29 Aug 2016 09:28 AM
Last Updated : 29 Aug 2016 09:28 AM

உலகின் மிக வயதான மனிதர்: 145-வது வயதிலும் ஆரோக்கியமாக வாழ்கிறார்

இந்தோனேசியாவைச் சேர்ந்த இம்பா கோத்தா உலகின் மிக வயதான மனிதர் என்று அழைக்கப் படுகிறார். அவருக்கு வயது 145.

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பகுதி ராகன் நகரைச் சேர்ந்த வர் இம்பா கோத்தா. இவர் 1870 டிசம்பர் 31-ம் தேதி பிறந்தார். இதற் கான ஆவணங்கள் கிடைத்திருப்ப தாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உலகளா விய அளவில் ஏற்கப்படும்போது உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை இம்பா பெறுவார்.

இவர் நான்கு முறை திருமணம் செய்துள்ளார். 10 பிள்ளைகள் பிறந் துள்ளனர். ஆனால் மனைவிகளோ, பிள்ளைகளோ யாரும் இப்போது உயிருடன் இல்லை. பேரப்பிள்ளை களும் கொள்ளு பேரப்பிள்ளை களும் மட்டுமே உள்ளனர்.

நீண்ட காலம் உயிர் வாழ்வதற் கான காரணத்தை இம்பா கோத்தா விடம் கேட்டபோது, நான் எதற்கும் அவசரப்பட மாட்டேன். மிகவும் நிதானமானவன். இப்போதே இறக்க தயாராக உள்ளேன். ஆனால் மரணம் என்னை நெருங்க மறுக்கிறது என்று தெரிவித்தார்.

இம்பாவின் பேரப்பிள்ளைகளில் ஒருவரான சூரியாந்தோ கூறிய போது, கடந்த சில ஆண்டுகளாக தான் எங்கள் தாத்தாவுக்கு முதுமை அதிகரித்துள்ளது. அவர் இப்போதும் ஆரோக்கியமாகவே உள்ளார் என்று தெரிவித்தார்.

பிரான்ஸை சேர்ந்த ஜுன் கால்மென்ட் என்ற பெண் 113 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து 1997-ம் ஆண்டில் உயிரிழந்தார். இவர்தான் உலகில் மிக நீண்ட காலம் உயிர் வாழ்ந்தவர். இம்பா கோத்தாவின் பிறப்புச் சான்று உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் உலகில் மிக நீண்ட காலம் வாழ்ந்தவர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x