Last Updated : 26 Nov, 2014 09:34 AM

 

Published : 26 Nov 2014 09:34 AM
Last Updated : 26 Nov 2014 09:34 AM

ஆஸ்திரேலிய தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளியினர்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வரும் 29-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டி, பிரச்சாரம் என இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

விக்டோரியா மாகாணத்தில் 1.10 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இம்மாகாணத்தில் அதி வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சமூகமாக இந்திய சமூகம் உள்ளது. பஞ்சாபி வேகமாக பரவி வரும் மொழியாகவும், இந்துமதம் வேகமாக பரவும் மதமாகவும் உள்ளது. இந்திய வம்சவாளியினர் இங்கு அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றனர்.

தேர்தலில் புறநகர்ப்பகுதிகளில் ஏராளமான இந்தியர்கள் போட்டியிடுகின்றனர். லிபரல், லேபர், கிரீன்ஸ்,ஆஸ்திரேலின் கிறிஸ்டியன்ஸ் என பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் ஏராளமான இந்தியர்கள் போட்டியிடுகின்றனர்.

லிபரல் கட்சி இந்திய வம்சாவளியினர் 6 பேரைக் களமிறக்கியுள்ளது. ஆஸ்திரேலியன் கிரீன் கட்சி 3 இந்திய வம்சாவளியினரைக் களமிறக்கியுள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 896 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 21 பதிவு பெற்ற கட்சிகள் சார்பில் 789 வேட்பாளர்களும், 107 பேர் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

“இந்தியர்கள் அதிகம் போட்டியிட்டாலும், நாடாளுமன்றத்தில் ஒரு இந்திய வம்சாவளி உறுப்பினர் கூட இல்லை. அதேசமயம் சீனா, இலங்கை, கம்போடியா வம்சாவளியினர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்தியர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என, வியந்தம்வாலே கவுன்சிலர் குப்தா, முன்னாள் லேபர் கட்சி வேட்பாளர் மனோஜ் குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், லிபரல் கட்சி வேட்பாளர் புல்விந்தர் சிங், “அரசியல் பிரதிநிதித்துவம் ஆஸ்திரேலிய கலாச்சாரத்துடன் இந்தியர்கள் இணைவதற்குத் துணை புரியும். இம்முறை ஓரிரு இந்தியர்கள் வெற்றி பெறக்கூடும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x