Published : 10 Sep 2015 07:52 PM
Last Updated : 10 Sep 2015 07:52 PM

அவர்கள் அகதிகள்தான், குடியேறுபவர்கள் அல்ல!

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பா மிகப்பெரும் சாட்சியாக இருக்கிறது.

கடந்த பல மாதங்களாக ஆயிரக்கணக்கான சிரியா, ஆப்கனிஸ்தான், ஈராக், எரித்ரியா மற்றும் தெற்கு சஹாராவைச் சேர்ந்த ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் உயிர்வாழவே போராடும் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் ஐரோப்பாவை அடைவதற்கு முயன்றுகொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவை நோக்கிய பயணத்தின் முயற்சியில் ஆயிரக்கணக்கானவர் மாண்டு போயுள்ளனர்.

மிகவும் பீதியூட்டும் வகையிலான, துருக்கிய கடலோரப் பகுதியில் கரையொதுங்கியிருந்த மூன்று வயது அய்லான் குர்தியின் இறந்த உடல் படம், மனிதாபிமானத்திற்கு விடுக்கப்பட்ட மாபெரும் சவாலாகவே காட்சியளித்தது

ஐரோப்பா எழுப்பும் சந்தேகங்கள்

இந்த நெருக்கடி மேலும் மோசமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேர் மேற்கு ஐரோப்பாவிற்கு வருவார்கள் என ஐ.நா. கணித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் இக்கணிப்பு கூறுகிறது.

குடியேறும் மக்களுக்காக பல முக்கியமான கொள்கை முடிவுகளை நோக்கி தீவிர கவனத்தை செலுத்த ஐரோப்பா ஒன்றியம் தள்ளப்பட்டுள்ள இச்சூழ்நிலையை நோக்கி உலகின் ஒட்டுமொத்த கவனம் குவிந்துவருகிறது.மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகியுள்ள இந்த நெருக்கடியைப் பற்றி ஐரோப்பிய தலைவர்களும் ஊடகங்களும் குடியேறும் நெருக்கடி குறித்த பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

பெரும்பான்மையான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஐரோப்பிய கடற்கரையை நோக்கிவருவது நல்ல வாழ்க்கையைத் தேடலாக, பொருளாதார புலம் பெயர்வாகவே அவர்களால் சித்தரிக்கப்படுகிறது. மத்திய தரைகடல் பகுதி நெருக்கடியில் தத்தளித்துவரும் நிலையில், ஐரோப்பிய அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் புலம்பெயர்வு குறித்த விவாதத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

தற்போது நிலவிவரும் ஐரோப்பிய சமூகத்தின் அமைப்புக்கும் நிம்மதியான வாழ்க்கைத் தரத்திற்கும் அச்சுறுத்தலாக வருவார்களோ என 'அகதிகளை' குடியேறுபவர்களோடு ஒப்பிடுவதை அங்குள்ள சில ஐரோப்பிய தேசிய அரசியல் அமைப்புகள் தூண்டி வருகின்றன.

ஐநா அகதிகள் சட்டம்

அகதிகள் என்ற சொல்லாடல் சட்டரீதியாகவும் இதரவகையிலும் எவ்வாறு பொருந்துகிறது என்பது விரிவான ஆராய்ச்சிக்குரியது.

அகதிகளுக்கான ஐநா சபை உயர் ஆணையத்தின் 1951 அகதிகள் சட்டத்தின்படியும் 1967ஆம் ஆண்டு விதிகளின்படியும் ஒரு அகதி யார் என வரையறுக்கப்பட்டுள்ளது.

அதாவது எந்த ஒரு நபரும் ''இனம் காரணமாக துன்புறுத்தல் காரணமாக நன்கு உறுதிசெய்யப்பட்ட அச்சம் காரணமாகவோ, நாட்டுரிமை(Nationality) மற்றும் குறிப்பிட்ட ஒரு சமூகக்குழுவின் அல்லது அரசியல் பிரிவின் உறுப்பினர், நாட்டுக்குள் இருக்கமுடியாமல் வெளியே இருக்க வேண்டும். அல்லது அல்லது பயம் காரணமாக, குறிப்பிட்ட நாட்டின் பாதுகாப்பை பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்க வேண்டும்''

அகதிகள் சர்வதேச சட்டம்

சட்டத்தில், ஒரு அகதிக்கும் ஒரு குடியேறுபவருக்கும் உள்ள வேறுபாடு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முதன்முதலாக, 'அகதிகள் சர்வதேச சட்டத்தின்' கீழ் வேறுபட்ட மற்றும் தனித்துவமான பாதுகாப்புகளை அகதிகள் பெறுகின்றனர். சர்வதேச புகலிட சட்டத்தின் பரிணாம வளர்ச்சியைப் பொறுத்தவரையில் ஆயுத மோதல்கள் காரணமாகவும், உள்நாட்டில் உருவான கொந்தளிப்பு காரணமாகவும் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படும் சூழ்நிலைகளிலும் தங்கள் நாடுகளிலிருந்து வெளியேறி தப்பித்து வாழ நினைப்பவர்களுக்கு இந்த அகதிகள் சட்டத்தின் வரையறை மேலும் விரிவடைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்தகைய நபர்கள் பொதுவாக 'மனிதாபிமான அகதிகள்' என்றே குறிப்பிடப்படுகிறார்கள். அகதிகள் சட்டத்தின்படி தங்கள் நாட்டின் துன்புறுத்தப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்து காக்கப்படவும் பாதுகாப்புகளைப் பெறவும் இன அல்லது மதப் பாகுபாடில்லாத வகையில் அடிப்படை மனித உரிமைப் பாதுகாப்பைப் பெறவும்; நியாயமான மிகச்சரியான புகலிட நடைமுறைகளை அணுகவும், நிர்வாக உதவிகளை, இன்னபிறவற்றைப் பெறவும் சட்டப்படி அகதிகளுக்கு உரிமை உண்டு.

மாறாக, மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்து கிளம்பிவரும் அகதிகளைப் பொறுத்தவரையில் ''எங்களுக்கு அவர்கள்மீது நம்பிக்கை வரவேண்டும்'' என சில ஐரோப்பிய அரசியல் தலைவர்களாலும் சில ஊடகங்களாலும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகின்றன.

அகதிகள் குடியேறுபவர்கள்தானா?

மறுபுறம், குடியேறுபவர் (தங்கள் சொந்தநாட்டிலிருந்து வெளியேற விரும்புபவர்கள், முக்கியமாக ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடி, உள்நாட்டு கொந்தளிப்பு அல்லது ஆயுதமோதல், அடக்குமுறையை எதிர்த்து அங்கிருந்து தப்பியோடிவருபவராயினும்) சர்வதேச சட்டத்தின் எந்த பாதுகாப்பையும் உரிமைகளையும் அனுபவிக்க முடியாத சூழல் உள்ளது. குடியேறுபவர்களுக்கு சுதந்திரம் வழங்குவது குறித்து நாடுகள் குடியேறுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவரும் சூழ்நிலையிலும் சொந்தக் குடியேற்ற சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் சூழ்நிலையிலும் இப்பிரச்சனைகள் எழும்.

சட்டத்திற்கு அப்பால், இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்விலும் பாதுகாப்பிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்கவல்ல பொது நடத்தைகள் மற்றும் மனப்பான்மைகள் குறித்த கருத்தை வடிவமைப்பதில் விமர்சன முக்கியத்துவம் பெறுகிறது.

ஒருவர் புலம்பெயர்ந்தோராக இருப்பது அவரது ஒரு தேர்வாக இருக்கும்பட்சத்தில் சொந்த நாட்டிலிருந்து வந்து நல்ல வாழ்க்கையை தேடுவதற்கான தானாக முன்வந்த ஒரு தன்னிச்சையான செயல் அல்ல அது. சொந்த நாட்டில் உள்நாட்டுக் கலவரம் மற்றும் ஆயுத மோதல் அடக்குமுறை அச்சுறுத்தலிலிருந்து சுய உள்ளுணர்வின் தூண்டுதலின்பேரில் அது உருவாகியிருக்க வேண்டும்.

குடியேறுபவர்களை பிரித்தறிதல்

தவறு, சரி என்பது பின்னரே ஆராயப்பட்டாலும் நாட்டின் எல்லைகளைக் கடந்து வருவதற்கு நியாயமான காரணம் இருக்க வேண்டும். ஒன்றுக்கொன்று பகிர்ந்துகொள்ளக்கூடிய, கூட்டு ஆர்வத்தைக்கொண்ட ஒன்றாகவே இந்த உலக சமுதாயம் உள்ளது. எனவே குடியேறுபவர்கள், அகதிகளோடு கலந்திருப்பதைக் தீவிரமாக கண்கண்டறிந்து அவர்களை தண்டிப்பது பெரிய விஷயமல்ல. இந்நிலையில் குடியேறுபவர்களுக்கான பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

மாறாக, சில ஐரோப்பிய அரசியல் தலைவர்களும் அங்குள்ள ஊடகங்களும் மத்திய தரைகடல் நாடுகளிலின் நெருக்கடிகளில் இருந்து வரும் அகதிகளைக் குறித்து எங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்கிறார்கள்.

பெரும்பான்மையான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் மனித உரிமை மீறல்கள் பெருகுவதாலும் மதக் கிளர்ச்சியாலும் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்படும் நாடுகளான சிரியா, எரித்திரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறார்கள்.

இது சொந்த நாட்டிலிருந்து ஐரோப்பாவுக்கு நல்வாழ்வைத் தேடி வரும் புலம்பெயர்ந்து வருபவர்களுக்கான ஆலோசனை அல்ல. உண்மையில் பெரிய எண்ணிக்கையில் தென் சஹாரா பாலைவன ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து குடியேறுபவர்கள் பெருகி வருகின்றனர்.

இருப்பினும் 'குடியேற்ற நெருக்கடி' என்கிற சொல்லாடல் ஒட்டுமொத்த மத்திய தரைக்கடல் பகுதியில் எழுந்துள்ள நெருக்கடிமிக்கதொரு பிரச்சனையின் ஒட்டுமொத்த தோற்றத்தோடு பொருத்திப் பார்க்கக் கூடியதாகத்தான் உள்ளது. ஆனால் ஐரோப்பிய தலைவர்களும் அங்குள்ள ஊடகங்களும் பெரிய அளவில் உருவாகியுள்ள நெருக்கடி உணர்வை அதன் உண்மைத்தன்மையை அவர்கள் தவறாக வழிநடத்துவதாகவே உள்ளது என்றுதான் கூறவேண்டியுள்ளது.

(ஜாய் மனோஜ் சான்க்லெச்சா கல்கத்தா, மேற்குவங்க தேசிய பல்கலைக்கழகத்தின் நீதித்துறை அறிவியல் பட்டதாரி, மும்பை சட்ட நிறுவனத்தில் பணியாற்றிவருபவர்.)

தமிழில்: பால்நிலவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x