Published : 29 Jan 2015 08:42 AM
Last Updated : 29 Jan 2015 08:42 AM

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: 34 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு ; 12 மனுக்கள் தள்ளுபடி; இறுதிப் பட்டியல் நாளை வெளியீடு

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 34 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் வி.மனோகரன் தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்த லுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 19-ம் தேதி தொடங்கியது. திமுக, அதிமுக, பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 46 பேர் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து வேட்புமனு பரிசீலனை ரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தேர்தல் பொதுப்பார்வையாளர் பால்கார் சிங் முன்னிலையில் நடைபெற்ற பரிசீலனைக்குப் பின் வி.மனோகரன் செய்தியாளர் களிடம் கூறியது:

மொத்தம் பெறப்பட்ட 59 மனுக்களில் தகுதிவாய்ந்ததாக 45 மனுக்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 34 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 12 பேர் அளித்திருந்த 14 மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டன. 30-ம் தேதி (நாளை) மாலை 3 மணி வரை வேட்புமனு வாபஸ் பெற கால அவகாசம் உள்ளது. வேட்பாளர் இறுதிப்பட்டியல் அன்று மாலை 3 மணிக்குப் பின்னர் வெளியிடப் படும். இத்தொகுதியில் 372 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 79 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

இழுபறிக்குப் பின் பாஜக வேட்பாளர் மனு ஏற்பு

பாஜக வேட்பாளர் எஸ்.சுப்ரமணியம் மீது குற்ற வழக்கு இருப்பதாக வேட்புமனு தாக்கல் செய்தபோதே குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் அவர் மறுத்துவந்தார். இந்நிலையில் ‘பாஜக வேட்பாளர் சுப்ரமணியம் மீது 2 மோசடி, ஒரு கொலை வழக்கு உள்ள நிலையில், அதுகுறித்து வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் எதுவும் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். எனவே, அவரது மனுவை நிரா கரிக்க வேண்டும்’ என்று அதிமுக வழக்கறிஞர் கங்கைச்செல்வன், பரிசீலனைக் குழுவிடம் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வில்லை. எனவே, அதுகுறித்து பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்றார் பாஜக வேட்பாளரின் வழக்கறிஞர் குமரகுரு.

இதேபோன்று திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.சி.பாபு, சுப்ரமணியத்தின் மனுவை நிராகரிக்கக் கோரி ஆட்சியரிடம் நேற்று மனு அளித்திருந்தார். பிற்பகலில் வேட்புமனு பரிசீலனை தொடர்ந்தபோது, பாஜக வேட்பா ளருக்கு எதிர்ப்புத் தெரிவித்த கட்சிகள் தரப்பில் யாரேனும் இருக்கிறீர்களா என தேர்தல் நடத்தும் அலுவலர் கேட்டார். அப்போது யாரும் இல்லாத தால், பாஜக வேட்பாளர் சுப்ரமணி யத்தின் மனு ஏற்கப்பட்டதாகவும், குற்ற வழக்குத் தொடர்பாக எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவித்தார். இதையடுத்து அங்கு திரண்டிருந்த பாஜகவினர் சுப்ரமணியத்துக்கு வாழ்த்துத் தெரிவித்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பெங்களூரு தமிழர்களின் மனுக்கள் தள்ளுபடி

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பி பெங்களூரு தமிழர்கள் எஸ்.ராகவன் மற்றும் அப்துல்வாஹிப் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்கள், நேற்று நடைபெற்ற பரிசீலனையின் போது தள்ளுபடி செய்யப்பட்டன. இருவரும் தமிழகத்தைச் சேர்ந்த வர்கள்தான் என்றாலும், வாக்களிக் கும் உரிமை தமிழகத்தில் இல்லை என்பதால் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x