Published : 19 Feb 2017 10:07 AM
Last Updated : 19 Feb 2017 10:07 AM

ஸ்டாலின் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம்: தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் கைது

கரூர், கடலூரில் வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான திமுக வினர் போராட்டம், மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நேற்று நடந்தது. சட்டப்பேரவைக்குள் நடந்த பிரச்சினையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கிழிந்த சட்டையுடன் வெளியே வந்தார். தன்னை அவைக் காவலர்கள் தாக்கியதாக நிருபர்களிடம் தெரி வித்தார். பின்னர் ஆளுநரிடம் புகார் கொடுத்து விட்டு, மெரினா காமராஜர் சாலையில் காந்தி சிலை முன்பு மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இந்த செய்தி தொலைக்காட்சிகள் மூலம் வேகமாக பரவியதை தொடர்ந்து சென்னை மெரினாவில் திமுக தொண்டர்களின் கூட்டம் நேரம் ஆக ஆக அதிகரித்தது. மேலும் தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம், மறியலில் ஈடுபட்டனர். சில இடங்களில் பஸ்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றன.

தஞ்சை, வேலூர்

கோவை, தஞ்சாவூர், வேலூர், வாணியம்பாடி, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம், திரு நெல்வேலி, தருமபுரி, கரூர், கடலூர் உட்பட பல இடங்களில் போராட் டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட னர். பல இடங்களில் சபாநாயகர் தனபாலின் உருவ பொம்மை களை எரித்தனர். கடலூர், கரூரில் அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கரூரில் பேருந்து நிலையத்துக்கு உள்ளே இருந்த அரசியல் பிரமுகர் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் வன்முறையில் ஈடுபட்டோர் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

சென்னையில் தேனாம் பேட்டை, ஓட்டேரி, பெரவள்ளூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், பெரம்பூரில் திமுகவினர் போராட்டம் மற்றும் தனபாலின் உருவ பொம்மைகளை எரித்தனர். ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் ஆங்காங்கே மறிய லும், கடையடைப்பும் நடைபெற் றது. ஸ்டாலின் விடுதலை செய்யப் பட்ட பிறகு கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் போராட் டத்தில் ஈடுபட்டதாக 30 ஆயிரத் துக்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x