Published : 22 Aug 2014 11:49 AM
Last Updated : 22 Aug 2014 11:49 AM

வேளாங்கண்ணிக்கு 5 சிறப்பு ரயில்கள்

நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெரு விழா ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளதை யொட்டி தெற்கு ரயில்வே சார்பில் மும்பை, லோக மானிய திலக், பந்த்ரா, திருநெல் வேலி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலிருந்து வேளாங் கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மும்பை- வேளாங்கண்ணி- மும்பை சிறப்பு ரயில் (02007/ 02008) ஆக.25-ம் தேதி மும்பை யிலிருந்து பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும் பூர், விழுப்புரம், நாகை வழி யாக வேளாங்கண்ணிக்கு வந்தடை யும். இதே ரயில் எதிர் வழித்தடத் தில் ஆக.27-ம் தேதி வேளாங் கண்ணியிலிருந்து புறப்பட்டு ஆக.28-ம் தேதி இரவு 10.30 மணிக்கு மும்பையைச் சென்றடையும்.

லோகமானிய திலக்- வேளாங் கண்ணி- லோகமானிய திலக் சிறப்பு ரயில் (01029/ 01030) ஆக.26-ம் தேதி லோகமானிய திலக்கி லிருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை வழியாக வேளாங்கண்ணியை வந்தடையும். இதே ரயில் எதிர் வழித் தடத்தில் ஆக. 28-ம் தேதி வேளாங் கண்ணியிலிருந்து புறப்பட்டு லோகமானிய திலக்குக்கு ஆக.29ம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்றடையும்.

பந்த்ரா- வேளாங்கண்ணி- பந்த்ரா சிறப்பு ரயில் (09001/ 09002) ஆக. 27-ம் தேதி காலை 7.55 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர், விழுப்புரம், திருப் பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை வழியாக வேளாங்கண்ணியை ஆக.28-ம் தேதி இரவு 10 மணிக்கு வந்தடையும். இதே ரயில் எதிர்வழித்தடத்தில் ஆக.28ம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு பந்த்ராவை ஆக.30-ம் தேதி பகல் 11 மணிக்கு சென்றடையும்.

திருநெல்வேலி- வேளாங் கண்ணி- திருநெல்வேலி சிறப்பு ரயில் (06701/ 06701) திரு நெல்வேலயிலிருந்து ஆக.28-ம் தேதி இரவு 8.50 மணிக்கு புறப் பட்டு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை வழியாக வேளாங்கண்ணியை ஆக.29-ம் தேதி காலை 6.45 மணிக்கு வந்தடையும். எதிர் வழித்தடத்தில் வேளாங்கண்ணியிலிருந்து ஆக.29-ம் தேதி மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு ஆக.30-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி- திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (06302/ 06302) திருவனந்தபுரத்திலிருந்து ஆக.27-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை வழியாக ஆக.28-ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும். எதிர் வழித்தடத்தில் வேளாங்கண்ணியிலிருந்து ஆக. 28-ம் தேதி பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்தை ஆக.29-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு சென்றடையும்.

இது தவிர ஆக.29 முதல் செப்.8-ம் தேதி வரையில் வேளாங்கண்ணி- நாகை இடையே பகல் 1.10 மற்றும் 2.20 மணிக்கும், நாகை- வேளாங்கண்ணி இடையே பகல் 1.45 மற்றும் பிற்பகல் 3 மணிக்கும் பயணிகள் ரயில் (டெமு ரயில்) இயக்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x