Published : 22 Aug 2014 11:51 AM
Last Updated : 22 Aug 2014 11:51 AM

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா: ஆக. 29-ல் தொடக்கம், 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேரால யத்தின் ஆண்டுப் பெருவிழா ஆக.29-ம் தேதி தொடங்கி, செப்.8ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி பாதுகாப்பு, அடிப்படை மற்றும் போக்குவரத்து வசதிகள் தொடர்பாக பல்வேறு ஏற் பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் முனுசாமி தலை மையில், வேளாங்கண்ணி பேரூ ராட்சி அலுவலகத்தில் நடை பெற்றது.

இதில், அனைத்துத் துறை ஊழியர்கள், மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம், பேராலய நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். இதில் ஆட்சியர் முனுசாமி பேசியதாவது:

‘‘வேளாங்கண்ணி நகருக்குள் ஒருவழிப் பாதை ஏற்படுத்தப்பட்டு, போக்குவரத்துக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக் கப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் வாகனங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப் படும்.

சுகாதாரத் துறை மூலம் தற்காலிக முகாம்கள் அமைக்கப் பட்டு, சுழற்சி முறையில் மருத்து வர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிவர். போதிய மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ளவும், ஆம்புலன்ஸ் வாகனத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல, தீயணைப்புத் துறை யினரும் தயார் நிலையில் இருப்பார்கள்.

கடற்கரையில் பாதுகாப்பான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு மட்டும் ஆண், பெண் கள் தனித்தனியே குளிக்க அனு மதிக்கப்படுவர். தண்ணீரில் செல்லக் கூடிய மோட்டார் சைக் கிள் மூலம், பக்தர்கள் கடலில் இறங்குவது கண்காணிக்கப்படும்.

வேளாங்கண்ணியில் பிளாஸ்டிக் தடை செய்யப் பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தேவையான அளவுக்கு பேப்பர் கப்புகள் விற்கப்படும். நகரில் அனைத்து இடங்களிலும் குப்பைகள் தேங்காத வகையில், உடனுக்குடன் அகற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் குடிநீர்த் தொட்டிகளை அமைத்து, அவை தொடர்ந்து நிரப்பப்பட்டுக்கொண் டேயிருக்கும்.

பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தற்காலிக கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட உள்ளனர். மேலும், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினரும் பணியில் இருப்பர். 50 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். ஓட்டல்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம், விலை கண்காணிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x