Published : 19 Feb 2017 08:38 AM
Last Updated : 19 Feb 2017 08:38 AM

வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைவால் ஓரிரு நாளில் தண்ணீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சென் னைக்கு குடிநீர் அனுப்பும் பணி ஓரிரு நாட்களில் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட் டத்துக்கு பிரதான நீர் ஆதாரம் ஆகும். இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக காவிரி தண்ணீர் வரும். இந்த நீரை தேக்கி பாசனம் மற்றும் சென்னை குடி நீருக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஏரியின் மொத்த கொள்ள ளவு 47.50 அடி. இந்த ஏரியால் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்று வரு கின்றன. இந்த ஆண்டு காவிரியில் இருந்து பாசனத்துக்கு மேட்டூர் தண்ணீர் திறக்கப்படவில்லை. வட கிழக்கு பருவமழையும் வஞ்சித்து விட்டது.

இந்நிலையில் மேட்டூரில் இருந்து கொள்ளிடத்துக்கு வந்த சிறிதளவு தண்ணீர் கீழணையில் தேக்கப்பட் டது. அந்த தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்படாமல் கோடை காலத் தில் சென்னைக்கு குடிநீர் அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் வீராணம் ஏரியில் நிரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து பூதங்குடி நீரேற்று நிலையத்தில் இருந்து சென்னைக்கு விநாடிக்கு 76 கன அடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. ஆனால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

தற்போது ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து 39 கன அடி தண்ணீரே உள்ளது. சென்னைக்கு விநாடிக்கு 9 கன அடி தண்ணீர் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் சென்னைக்கு அனுப்பப் படும் தண்ணீர் முற்றிலுமாக நிறுத் தப்படும் என்றும், ஏரி வறண்டு பிறகு தூர்வாரும் பணி தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏரிக்கு நீர்வரத்து இல்லை. இத னால் ஏரியின் நீர்மட்டமும் படிப் படியாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக சென்னைக்கு அனுப்பும் தண்ணீர் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இன்று அல்லது நாளைக்குள் ஏரியில் இருந்து தண் ணீர் அனுப்பப்படுவது நிறுத்தப் படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x