Published : 26 Feb 2017 01:46 PM
Last Updated : 26 Feb 2017 01:46 PM

விளக்கேற்ற பயன்படுத்தும் எண்ணெய் சமையலுக்காக விற்பனை: தடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

விளக்கேற்ற பயன்படுத்தும் கலப்பட எண்ணெயை சமையல் என்ணெய் என்று விற்பதை தடுக்க ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த எம்.விக்கிரமங்கலம் என்ற சிதம்பரம் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

அலங்காநல்லூரி்ல் சமையலுக் காக பலர் கடைகளில் நல்லெண் ணெய் வாங்குகின்றனர். தரமான நல்லெண்ணெய் விற்பதற் குப் பதிலாக விளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் கலப்பட்ட நல்லெண்ணெயை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். கலப்பட நல்லெண்ணெய் சமையலுக்கு உகந்தது அல்ல. இதை பயன்படுத்தினால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.

சில நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் விளக்கேற்ற உதவும் எண்ணெயை நல்லெண்ணெய் என்ற பெயரில் பொதுமக்களிடம் விற்கின்றனர். சில நிறுவனங்கள், வியாபாரிகளின் நியாயமற்ற வர்த்தக நோக்கத்துடன் பொதுமக்களின் உயிருடன் விளையாடுகின்றனர். இதை தடுக்க வேண்டிய உணவு கலப்பட தடுப்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கா மல் வேடிக்கை பார்க்கின்றனர்.

கலப்பட எண்ணெய் சுத்தி கரிக்கப்பட்ட அரிசி, தவிடில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் சமையலுக்கு நல்லதல்ல. வெளி உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். நல்லெண்ணெய் எள்ளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எள்ளை தவிர வேறு எந்த பொருளும் உண்மை யான நல்லெண்ணெயில் கலக்கப்படுவதில்லை. உண்மை யான நல்லெண்ணெய் உடலுக்கு நல்லது. ஆயுர்வேதம், யுனானி, சித்தா மருந்து தயாரிப்பில் நல் லெண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியாவில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய் தவிர்த்து பிற எண்ணெய்களில் கலப்படம் நடைபெறுகிறது. எனவே விளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் கலப்பட எண்ணெய்களில், நல்லெண் ணெய் என்ற வார்த்தையை பயன்படுத்தவும், இந்த எண்ணெய் சமையலுக்கு உகந்தது அல்ல எனக் குறிப்பிடவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.முத்துவேலன் வாதிட்டார். விசாரணைக்குப்பின் மனுதாரரின் புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஒரு மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உணவு கலப்பட தடுப்பு பிரிவினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x