Published : 24 Aug 2016 09:17 AM
Last Updated : 24 Aug 2016 09:17 AM

விலக்கி வைக்கப்பட்ட எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா மீண்டும் கானாடுகாத்தான் புள்ளி ஆனார்: நகரத்தார் மத்தியில் ஆதரவு திரட்ட முயற்சி

புள்ளியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த செட்டிநாடு குழுமத்தின் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை கானாடுகாத்தான் நகரத்தார்கள் (செட்டியார்கள்) புள்ளியில் மீண்டும் சேர்த்துள் ளனர்.

தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராம சாமிக்கும் அவரது சுவீகாரப் புதல்வர் ஐயப்பன் என்கிற முத்தை யாவுக்கும் இடையில் மனக்கசப்பு கள் ஏற்பட்டு, ஒருவர் மீது இன்னொருவர் குற்றச்சாட்டுக் களை கூறி வந்தனர். ஒருகட்டத்தில் பிரச்சினைகள் பெரிதாகி, முத் தையாவின் சுவீகாரத்தை ரத்து செய்வதாக அறிவித்தார் எம்.ஏ.எம்.ராமசாமி. தனக்கு இறுதிக் காரியங்களைக்கூட செய்யக்கூடாது எனவும் தனது சொத்தில் ஒரு ரூபாய்கூட முத்தையாவுக்கு செல்லக்கூடாது எனவும் உயில் எழுதி வைத்தார்.

எதிர்கால நலன் கருதி

எம்.ஏ.எம்.ராமசாமியின் கோரிக் கையை ஏற்று, கானாடுகாத்தான் நகரத்தார்கள் முத்தையாவை நகரத்தார் புள்ளியில் இருந்து (சமுதாய தலைக்கட்டு) விலக்கி வைப்பதாக அறிவித்தார்கள். இதைத் தொடர்ந்து, எம்.ஏ.எம்.ராமசாமியின் பட்டினசாமி பிரிவு காரியக் கமிட்டியானது கோயில் புள்ளியிலிருந்தும் முத்தையாவை விலக்கிவைப்பதாக முறைப்படி அறிவித்தது.

இந்நிலையில், எம்.ஏ.எம்.ராமசாமி கடந்த ஆண்டு கால மானார். அவரது இறப்புக்குப் பிறகு செட்டிநாட்டு அரண் மனை சம்பந்தப்பட்ட சொத்து களை முழுமையாக தன் வசப் படுத்துவதில் அக்கறை காட்டிய முத்தையா, செட்டிநாட்டு நகரத்தார் மத்தியில் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ளத் தொடங் கினார்.

இந்நிலையில், எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவுடைய குழந்தை களின் எதிர்கால நலன் கருதி அவரை மீண்டும் புள்ளியில் சேர்த் துக்கொள்வதாக அறிவித்திருக் கிறார்கள் கானாடுகாத்தான் நகரத்தார்கள்.

இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் பேசிய முத்தையாவுக்கு நெருக்கமான வட்டத்தினர், “புள்ளி யில் சேர்ப்பது என்பது நகரத்தார் சமூகத்தில் மிக முக்கியமான அங்கீகாரம். முத்தையா புள்ளி யில் சேராமல் இருந்தால் அவரது பிள்ளைகளுக்கு நகரத் தார் சமூகத்தில் திருமணம் முடிக்க முடியாது. அதை கருத்தில்கொண்டுதான் அவரை மீண்டும் கானாடுகாத்தான் நகரத் தார்கள் புள்ளியில் சேர்த்திருக் கிறார்கள்.

வாக்குறுதி அளிப்பு

அத்துடன் கானாடுகாத்தான் கோயில்கள் திருப்பணிக்கும் ஊரின் நலனுக்காக தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித் திருக்கிறார். புள்ளியில் சேர்த்த தற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் புள்ளியில் இருந்து விலக்கிவைக்கப்பட்ட அவரை மீண்டும் புள்ளியில் சேர்க் கக்கூடாது என ஏ.சி.முத்தையா உள்ளிட்ட சிலர் ஆட்சேபமும் தெரி வித்து வருவதால் இரு தரப்பும் பலம் திரட்டும் வேலைகளில் இறங்கியுள்ளன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x