Published : 23 Aug 2014 09:30 AM
Last Updated : 23 Aug 2014 09:30 AM

ராஜபக்ச வீட்டில் திருச்செந்தூர் அர்ச்சகர்கள் யாகம்! - விசாரிக்க கோரி டிஐஜி-யிடம் மனு

‘இலங்கை அதிபர் வீட்டில், திருச்செந்தூர் அர்ச்சகர்கள் யாகம் நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணியினர், திருநெல்வேலி சரக டிஐஜி-யிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

அதன் ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு, வழக்கறிஞர் ம.சு.சுதர்சன் (மதிமுக), ததேமு மாவட்ட செயலாளர் ஈ.தமிழீழன், தமமுக மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் உள்ளிட்டோர் அளித்த மனு விவரம்:

தமிழக இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகர்கள் குழு, 20.7.2014 அன்று இலங்கைக்கு சென்று அந்நாட்டு அதிபர் ராஜபக்ச இல்லத்தில், ‘சத்ரு சம்கார திரிசத் செப’ யாகம் செய்துள்ளனர். அதன்பின், இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திரும்பியிருக்கிறார்கள். இச்செய்தி பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

திசைதிருப்பும் பயணம்

அர்ச்சகர்களின் செயல்பாடுகள் முதல்வர் ஜெயலலிதாவின் தமிழீழ மக்கள் சார்பான நடவடிக்கைகளுக்கு எதிராகவும், முதல்வரின் முயற்சிகளை திசைதிருப்பும் வகையிலும் உள்ளது. இதில் தனிக்கவனம் செலுத்தி, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x