Published : 27 Feb 2015 11:04 AM
Last Updated : 27 Feb 2015 11:04 AM

ரயில்வே பட்ஜெட்டுக்கு வரவேற்பும், எதிர்ப்பும்: பயணிகள் சங்கத்தினர், மக்கள் கருத்து

ரயில்வே பட்ஜெட்டுக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்.

கே.பாஸ்கர், மண்டல ரயில் பயணிகள் சங்க முன்னாள் ஆலோ சனைக் குழு உறுப்பினர்:

புதிய ரயில்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை நிறைவேற் றுவது குறித்த அறிவிப்பும் இல்லை. 5 நிமிடத்துக்குள் டிக் கெட் வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டம் ஏற்கெனவே தோல்வி அடைந்த நிலையில், இந்த புதிய திட்டம் எந்த அள வுக்கு சாத்தியம் என தெரிய வில்லை. முகவர்களின் முறை கேட்டை தடுக்கும் நோக்கில்தான் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக் கப்பட்டது. தற்போது மீண்டும் 120 நாட்கள் ஆக்கியுள்ளனர். மீண்டும் முறைகேடுகள் நடக்கக்கூடும். கட்டணம் உயர்த்தப்படாதது ஆறுதல்.

எஸ்.மோகன்ராம், ரயில் பயணி கள் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர்:

பெண் பயணிகள் பாதுகாப்புக்காக ரயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத் தப்படும் என்ற அறிவிப்பு எதிர் பார்த்ததே. இத்திட்டத்தை அனைத்து ரயில்களிலும் செயல் படுத்த வேண்டும். மூத்த குடி மக்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு ‘லோயர் பர்த்’ வசதி அளிக்கும் திட்டம், பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாதது வர வேற்கத்தக்கது. இரட்டை ரயில் பாதை திட்டம், மின்மயமாக்கல், புதிய ரயில்கள் பற்றிய அறிவிப் புகள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. மொத்தத்தில், பட்ஜெட் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

டி.ரவிக்குமார், அகில இந்திய ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சங்கத் தலைவர்:

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பயணிகள் பாது காப்பு, ரயில் நிலையங்களின் அடிப்படை வசதிகள் தொடர்பாக அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு கண் காணிப்பு கேமரா, ரயில் நிலையங் களில் ‘வை-ஃபை’ வசதி அறிவித் திருப்பது வெறும் கண்துடைப்பு. மொத்தத்தில், ஒரு சம்பிரதாய சடங்காக ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது.

ஜி.லட்சுமி நரசிம்மன், மத்திய அரசு ஊழியர்:

பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவதற்குள் புதிய ரயில் கள் அறிவிக்கப்படும் என கூறி யிருப்பது ஆறுதல், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் புதிய ரயில் திட்டங்கள் குறித்த அறிவிப்பு இடம் பெறாததது வருத்தம் அளிக்கிறது. பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம் வரவேற்கக்கூடியது.

ஜி.அருணா, இல்லத்தரசி.

பயணிகள் கட்டணம் உயர்த்தா தது, பெண் பயணிகளின் பாது காப்புக்காக ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு காமிரா பொருத்து வது ஆகியவை வரவேற்கத்தக் கது. புதிய ரயில்கள் இல்லை என்பதுதான் ஏமாற்றம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x