Published : 26 Apr 2017 09:10 AM
Last Updated : 26 Apr 2017 09:10 AM

ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள்- போலீஸார் இடையே தள்ளுமுள்ளு: பி.ஆர்.பாண்டியன் உட்பட 4 பேர் காயம்

திருவாரூர் அருகே நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பி.ஆர்.பாண்டி யன் உட்பட 4 விவசாயிகள் காயமடைந்தனர்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் திருச்சியில் இருந்து நாகூர் சென்ற பயணிகள் ரயிலை நேற்று காலை 7.30 மணியளவில் குளிக்கரையில் மறித்தனர்.

தகவலறிந்த கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் ராஜகோபால் உள்ளிட்ட போலீஸார், மறியலில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மறியல் போராட்டம் தொடர்ந்தது.

அப்போது, ரயில் பயணிகள் விவசாயிகளை நோக்கி சப்தம் எழுப்பினர். இதனால், ரயில் பயணிகளுக்கும், மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் உருவானது. இதைத்தொடர்ந்து, விவசாயிகள் தரப்பில் சிலர் பயணிகளை சமாதானப்படுத்தினர். ரயிலை விட்டு இறங்கிய சில பயணி களை, விவசாயிகள் தங்களது வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள கடைவீதி பகுதியில் கொண்டுசென்று விட்டனர். மேலும், 6 மூட்டை தண்ணீர் பாக்கெட்களை ரயில் பயணிகளுக்கு வழங்கினர்.

எனினும், வெயில் அதிகரித்த தால் போலீஸார் விரைவாக போராட்டத்தை முடிக்க வேண்டும் என விவசாயிகளிடம் கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்து, விவ சாயிகள் போராட்டத்தைத் தொடர்ந் தனர். பின்னர், கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு, பி.ஆர்.பாண்டி யன் உள்ளிட்ட விவசாயிகளை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளி யேற்றினர். அப்போது, போலீஸா ருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில், விவசாயி மனோகரன்(62) மயக்கமடைந்தார். பி.ஆர்.பாண்டியன், டிபிகே.ராஜேந்திரன் ஆகியோர் காயமடைந்தனர்.

காரைக்காலில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் திருவாரூரிலும் மன்னார்குடி- மயி லாடுதுறை பயணிகள் ரயில் கொரடாச்சேரியிலும், எர்ணாகுளத் தில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த பயணிகள் ரயில் தஞ்சாவூரிலும் நிறுத்தப்பட்டு, இரண்டரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x