Last Updated : 24 Jul, 2014 09:21 AM

 

Published : 24 Jul 2014 09:21 AM
Last Updated : 24 Jul 2014 09:21 AM

மொபைல் ஆப் மூலம் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை: மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் அறிமுகம்

மொபைல் ஆப் (செயலி) மூலம் வகுப்புகளில் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எப்படி செயல்படுகிறது?

மாணவர்களுக்கு ஆசிரியர் வகுப்பெடுக்கும்போது மற்று மொரு ஆசிரியர் வகுப்பறையில் இருப்பார். அவர் மாணவர்கள் அமர்ந்திருக்கும் முறை, அவர்களது உடல் மொழி, முக பாவனைகள், உள்ளிட்டவைகளை ஹார்ட் HART- (Human Affect Recording Technology) எனப்படும் கைப்பேசி ஆப்-ல் பதிவிடுவார்.

ஒரு பருவத்துக்கு ஒரு பாடத்துக்கு மூன்று முறை ஆசிரியர் இதனை பதிவிடுவார். இந்த தகவல்களைக் கொண்டு மாணவர்களின் செயல்பாடுகளை கணிக்க கொலம்பியா ஆசிரியர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வல்லுநர் ரயன் பேக்கர் ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளார். இது ப்ராம்ப் ப்ரோடாக்கால் (BROMP-Baker Rodrigo Observation Method Protocol) என்றழைக்கப்படுகிறது.

இத்திட்டத்திற்காக 50 மாநகராட்சி ஆசிரியர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இவர் களுக்கு இரண்டு பயிற்சி வகுப்புகள் முடிந்துள்ளன. இறுதிகட்ட வகுப்புகள் முடிந்த பிறகு இந்த ஆசிரியர்களுக்கு ப்ராம்ப் சான்றிதழ் இன்னும் சில மாதங்களில் வழங்கப்படும். அதன் பிறகே அவர்கள் மாணவர்களை கணிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆசிரியர்களுக்கு ஆண்ட்ராய்ட் கைப்பேசிகள் விரைவில் வழங்கப்பட உள்ளன.

இந்த திட்டம் க்வெட் - என்ற தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது. க்வெட் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு துணைத் தலைவர் உமா மகேஷ் கூறுகையில், “யார் வேண்டுமானாலும் மாணவர்களை கணித்து விட முடியாது.

மிக நுட்பமாக அவர்களை கவனித்தால் மட்டுமே சரியான முடிவுகள் கிடக்கும் என்பதால், இது குறித்து ஆசிரியர் களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.

வகுப்புகளிலிருந்து கிடைக் கும் தகவல்கள் கொலம்பியா வில் உள்ள ஆசிரியர் பல்கலை கழகத்துக்கு அனுப்பப்படும்.

அவர்கள் எந்தவித மாற்றங்களை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள்,” என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “ஒரு மாணவர் ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் தொடர்ந்து குறைவான மதிப்பெண் எடுத்தால், அவர் பள்ளியை விட்டு நிற்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாணவரும் எந்தெந்த பாடங்களில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள் என்று தெரிவதால், அவர்கள் பள்ளியை விட்டு நிற்காமல் இருக்க முன் ஏற்பாடுகள் செய்யப்படும்,” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x