Published : 31 Mar 2015 09:36 AM
Last Updated : 31 Mar 2015 09:36 AM

மோசடியான முதலீட்டு விளம்பரங்களா?- போன் செய்யலாம்: தொடர்பு எண்ணை அறிவித்தார் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.

முதலீட்டை ஈர்ப்பதற்காக கவர்ச்சிகரமாக அறிவிக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் பதிவு செய்யாத நிதி நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் பொருளா தார குற்றப்பிரிவு போலீஸுக்கு தகவல் அளிக்க வேண்டும் என போலீஸ் ஐ.ஜி. அசோக்குமார் தாஸ் தெரிவித்தார்.

கோவை மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில், போலி நிதி நிறுவனங்களைக் கண்டறிவது குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. பொருளா தார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட முகாமில், பொதுமக்கள் மற்றும் உள்ளூர் போலீஸார் கலந்து கொண்டனர். போலீஸ் ஐ.ஜி., அசோக்குமார் தாஸ் முன்னிலை வகித்தார்.

முகாமின்போது செய்தி யாளர்களிடம் அவர் கூறும் போது, “மோசடியான, கவர்ச்சிகர மான முதலீட்டை ஈர்க்கும் விளம் பரங்களின் மீது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் சரியானவைதானா என்பது குறித்து அறிவதற்கும், எங்களுக்கு தகவல் கொடுப் பதற்கும் 9840584729 என்ற அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இந்த விழிப்புணர்வை பொது மக்களிடம் கொண்டு செல்லும் பொருட்டு, துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த காலங்களைவிட விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றார்.

முகாமில் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் பேசியதாவது: தற்போது இந்தியா முழுவதும் புற்றீசல்போல் பல நிதி நிறு வனங்கள் வளர்ந்துள்ளன. தங்களது நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால், முதலீடு செய்த பணத்துக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி கவர்ச்சிகரமான விளம்பரத்தில் ஈடுபடுகின்றனர். அதன்பின்னர், பணம் வசூலித்துவிட்டு ஏமாற்றி விடுகின்றனர்.

இது போன்ற மோசடி நிதி நிறுவனங்கள் மூலம் பணி ஓய்வு பெற்றவர்கள், மாத ஊதியம் பெறுபவர்கள், கூலித் தொழி லாளர் உள்ளிட்ட நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற மோசடி நிதி நிறு வனங்களால் முதலீட்டாளர் களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவ துடன், அவர்களது வாழ்கையும் நிலைகுலைந்து விடுகிறது.

எனவே, முதலீடு செய்வதற்கு முன்பாக முழுமையாக விசாரிக்க வேண்டியது அவசியம். அதற்கு நாங்கள் கொடுத்துள்ள அலைபேசி எண்ணுக்கு அழைத்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்களும் போலி நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிவியுங்கள் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x