Last Updated : 27 May, 2016 08:43 AM

 

Published : 27 May 2016 08:43 AM
Last Updated : 27 May 2016 08:43 AM

மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயார்: 2 நாட்களுக்குள் அறிவிப்பு வெளியாகிறது

தமிழகத்தில் மூடப்படவுள்ள 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் நேற்று நடந்த டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்கள் கூட் டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகவுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சட்டப்பேரவைத் தேர்த லில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானதும், மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை 2 மணி நேரம் குறைத்ததோடு, 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். இதன்படி, மதுக் கடைகள் காலை 10 மணிக்கு திறப்பதற்கு பதிலாக பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு வரு கின்றன.

இதற்கிடையே, மூடப்பட வேண் டிய 500 டாஸ்மாக் கடைகளை கண் டறியும் பணியும் முடுக்கிவிடப்பட் டது. கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் இந்தப்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

தமிழகத்தில் மொத்தம் 6 ஆயி ரத்து 700 டாஸ்மாக் கடைகள் உள் ளன. இதில் எந்தெந்த கடைகளை மூட வேண்டும் என்பதற்காக மண் டல மேலாளர்களிடமிருந்து அதற் கான பரிந்துரை பட்டியல் கேட்கப்பட் டது. தமிழகத்தில் டாஸ்மாக் மது பான விற்பனையின் நிர்வாகத்துக்காக 35 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள் ளன. அதன்படி, 35 மாவட்ட மேலாளர்களும், அவர்களின் கீழ் உள்ள துணை மேலாளர்களும் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகளின் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பள்ளி, கோயில், சர்ச், மசூதி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக்கடையை மூட வேண்டும் என்ற எதிர்ப்பு அதிகமுள்ள பகுதிகள், விற்பனை குறைவான இடங்கள், கிராமப் புறங்கள், அருகருகே உள்ள கடைகள் என்கிற அடிப்படையில் மாவட்டத்துக்கு 10 முதல் 15 கடைகள்வரை அவர்கள் கணக் கெடுத்தனர். இதன்படி, 525 கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

இந்தப்பட்டியலிருந்து 500 கடைகளை தேர்வு செய்வதற்காக டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களின் ஆலோ சனைக்கூட்டம் இன்று (நேற்று) மாலை நடந்தது. இந்த ஆலோ சனைக்கூட்டத்தில், மூட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப்பட்டியல் அரசிடம் நாளை (இன்று) வழங்கப்படவுள்ளது. இதன் பேரில், 500 டாஸ்மாக் கடைகள் இரண்டொரு நாட்களில் மூடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x