Published : 26 Apr 2017 08:58 AM
Last Updated : 26 Apr 2017 08:58 AM

முழு அடைப்புப் போராட்டம் வெற்றி: ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் நன்றி

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் நூறு சதவீதம் வெற்றிபெற்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக ஜி.ராமகிருஷ் ணன் வெளியிட்ட அறிக்கையில், ‘விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக, சிபிஐ(எம்), காங்கிரஸ், சிபிஐ, விடுதலைச்சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று (நேற்று) நடத்திய முழு அடைப்பு போராட்டம் நூறு சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டுள் ளன. ஆட்டோ, லாரிகள் ஓடவில்லை.

போராட்டத்தை வெற்றி பெறச் செய்த அனைத்து தொழிற்சங்க அமைப்புகளுக்கும், வணிகர் களுக்கும், ஆதரவளித்த பொது மக்கள் பல்வேறு விவசாய அமைப்பு கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு, வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.

இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், ‘முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு, பாஜகவின் அச்சுறுத்தலையும் மிரட் டலையும் நிராகரித்து முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவிய அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், போக்கு வரத்து அமைப்புகள், சாலையோர வியாபாரிகள், கோயம்பேடு சந்தை உள்ளிட்ட உழவர் சந்தை வியாபாரிகள், வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், மாணவர், இளைஞர் அமைப்புகள், மாதர் அமைப்புகள், அரசுப் பணி யாளர்கள் என அனைத்து பிரிவின ருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x