Published : 26 Feb 2017 01:49 PM
Last Updated : 26 Feb 2017 01:49 PM

முனியாண்டி கோயிலில் பிரியாணி திருவிழா: திருமங்கலம் அருகே 60 ஆயிரம் பேருக்கு விடிய, விடிய அன்னதானம்

மதுரை அருகே முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமை யாளர்கள் சார்பில் நடந்த பிரியாணி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மூன்று நாள் திருவிழாவில் 60 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருமங்கலம் அருகே உள்ளது வடக்கம்பட்டி கிரா மம். இவ்வூரைச் சேர்ந்த சுப்பையா நாயுடு 1937-ம் ஆண்டு காரைக்குடியில் முனி யாண்டிவிலாஸ் என்ற பெயரில் ஹோட்டலை முதல்முறையாக தொடங்கினார். அடுத்த ஆண்டு கள்ளிக்குடியில் ராம்ரெட்டி என்பவர் 2-வது ஹோட்டலை தொடங்கினார். இன்று நான்கு தென் மாநில ங்களில் இந்த பெயரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஹோட்டல்களை பெரும் பாலும் ரெட்டியார், நாயுடு சமூகத்தினரே நடத்துகின்றனர். இந்த ஹோட்டல் உரிமையாளர்களால் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வடக்கம்பட்டி முனி யாண்டி கோயில் பூஜை நடைபெறுகிறது. நேற்று அதிகாலை நடந்த சிறப்பு பூஜையில் சுற்று வட்டார கிராமத்தினர் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப் பட்டது. 3 நாள் விழாவில் 60 ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

இது குறித்து விழாக் குழு நிர்வாகிகளும் ஹோட்டல் உரிமையாளர்களுமான சுப்பையன், தேவராஜ், காசி ராஜ், நாகராஜ், ராமசாமி கூறியது: கலப்படமில்லாத அசைவ உணவை வழங் குவதே முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களின் கொள்கை. உணவு வழங்குவது புண்ணியம். இதை பணம் வாங்கிக் கொண்டு வழங்கக் கூடாது. ஹோட்டல் தொழிலில் இது சாத்தியமில்லை என் பதால், ஆண்டுக்கொருமுறை அன்னதானம் வழங்கி புண்ணியம் தேடுகிறோம். இதற்காக வாடிக்கையாளர் கொடுக்கும் பணத்தின் ஒருபகுதியை செலவிடு கிறோம். தை மாதம் 2-வது வெள்ளிக்கிழமை நாயுடு சமூகத்தினரும், மாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை ரெட்டியார் சமூகத்தினரும் பிரியாணி அன்னதான பூஜை யை நடத்துகின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய ரெட்டியார் சமூ கத்தினர் பூஜையில் 120 ஆட்டு கிடா, 400 கோழிகள் முனியாண்டிக்கு காவு கொடுக்கப்பட்டன. இதன் இறைச்சியை 2,500 கிலோ அரிசியை பயன்படுத்தி விடிய, விடிய சுவையான பிரியாணி தயாரிக்கப்பட்டது. எங்கள் சமையல் கலைஞர்களே சிறப்பாக பிரியாணி தயாரித் தனர். சுவாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஹோட் டல் உரிமையாளர்கள், குடும் பத்தினர், கிராமத்தினர் பங்கேற்றனர். பின்னர் 10 ஆயிரத்திற்கும் அதிகமா னோருக்கு பிரியாணி வழங்கப் பட்டது. இந்த பூஜைக் காக 2 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் அடைக்கப் பட்டிருக்கும்.

முன்னதாக நடந்த பால் குடம், அபிஷேக தட்டு ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். வடக்கம்பட்டி மட்டுமின்றி கோபாலபுரம், செங்கப்படை, மலப்பட்டி, சோளம்பட்டி, அச்சம்பட்டி உட்பட பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஹோட்டல்களை நடத்தி வருகின்றனர் என்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x