Published : 28 Oct 2016 08:01 AM
Last Updated : 28 Oct 2016 08:01 AM

மின்கம்பி அறுந்து விழுந்ததை ‘கடவுளின் செயல்’ எனக் கூற முடியாது: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வீட்டுக்கு எதிரே மின்கம்பி அறுந்து விழுந்ததை கடவுளின் செயல் எனக் கூறுவதை ஏற்க முடியாது என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், மின்சாரம் தாக்கி பலியான இளை ஞரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாங்காட்டை சேர்ந்த ஆர்.குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது மகன் விக்டர்(27) பிளம்பராக பணியாற்றி வந்தான். கடந்த 2010 செப்டம்பர் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வந்த மகன் எதிரில் உள்ள காலியிடத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் பாய்ந்து பலியானார். மின்வாரியத்தின் பரா மரிப்பின்மை மற்றும் அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாகவே எனது மகனைப் பறிகொடுத்துள் ளேன். எனவே ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனுவுக்குப் பதிலளித்த மின்வாரியம், “அதிகாரிகளின் கவனக் குறைவு காரணமாக இந்த சம்பவம் நடைபெறவில்லை. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இது கடவுளின் செயல்” என தெரிவித்து இருந்தனர்.

மனுவை விசாரித்த தனி நீதிபதி தனது உத்தரவில், ‘‘மின்கம்பி காற்றில் அறுந்து விழுந்ததைக் கடவுளின் செயல் எனக்கூறுவதை ஏற்க முடியாது. காற்று, மழைக்கு தாங்கும் வகையில் மின்கம்பிகளை அமைத்து அவற்றை அவ்வப்போது பராமரிக்க வேண்டியது மின்சார வாரியத்தின் கடமை. மின்கம்பிகளை அமைக்கும் முன்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் மேற்கொள்ள வேண்டும். மின்கம்பத்தில் முறையாக பொருத் தப்படாததால்தான் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. எனவே மின்வாரியம் கூறும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இறந்த இளைஞருக்கு 27 வயதுதான் ஆகிறது. அவர் உயிரோடு இருந்தால் மாதம் குறைந்தது ரூ.2 ஆயிரத்து 500 வருமானம் ஈட்டி இருப்பார். இன்னும் 33 ஆண்டுகளுக்கு அவர் உயிரோடு இருந்திருப்பார். எனவே அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டை 8 வார காலத்துக்குள் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x