Published : 23 Jan 2017 11:20 AM
Last Updated : 23 Jan 2017 11:20 AM

மாமல்லபுரத்துக்கு 2016-ம் ஆண்டில் 10.4 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

மாமல்லபுரத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டில் உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் என மொத்தம் 10 லட்சத்து 4 ஆயிரத்து 203 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்ல புரத்தில் கடற்கரைக் கோயில், குடவரை சிற்பங்கள், கிருஷ்ணன் கோயில், புலிக் குகை, அர்ஜூனன் தபசு மற்றும் ஐந்துரதம் ஆகியவை அமைந்துள்ளன. இதனால், யுனெஸ்கோ அமைப்பின் மூலம் சர்வதேச சுற்றுலாத் தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுர சிற்பங்களை கண்டு ரசிப்பதற்காக, நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 2016-ம் ஆண்டில் 9,39,696 உள்நாடு மற் றும் 64,507 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என மொத்தம் 10,04,203 பயணிகள் குடவரை சிற்ப அழகை கண்டு ரசித்து சென்றுள்ளனர். இதில், ஐந்து ரதம் சிற்பங்களை 5,80,937 நபர்களும், கடற்கரை கோயிலை 4,23,266 நபர்களும் கண்டு ரசித் துள்ளதாக தொல்லியல் மற்றும் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சுற்றுலாத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: மாமல்லபுரம் சிற்பங்களை கண்டு ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதனால், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை சர்வதேச அளவில் மேம்படுத்தப்பட்டு வரு கிறது. ஆங்காங்கே, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இருக்கைகள் மற்றும் அலாங் கார விளக்குகள் அமைக்கப்பட் டுள்ளன. குடவரை சிற்பங்களை அருகில் சென்று கண்டு ரசிப்பதற் காக கட்டணம் வசூலிக்கப்படுகி றது. இதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணங்கள் உயர்த்தப்பட் டன. இந்நிலையில், கடந்த ஆண் டில் 10.4 லட்சம் சுற்றுலாப் பயணி கள் மாமல்லபுரத்துக்கு வந்து சென்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x