Published : 24 Oct 2014 10:35 AM
Last Updated : 24 Oct 2014 10:35 AM

மழை நிவாரணப் பணிகளுக்கு ஒருங்கிணைப்பு அலுவலர்கள்: கொசுக்களை கட்டுப்படுத்த 3500 பேர்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை

மழை நிவாரணப்பணிகளை கண்காணிக்க, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங் களுக்கும் சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: சென்னையில் வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் இடர்ப்பாடுகளை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதன்படி சாலையில் தேங்கும் மழைநீரை அகற்றுவது, சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துவது, சேதமான சாலைகளை சரி செய்வது, தொற்று நோய் பரவாமல் தடுப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை துரிதப் படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒருங்கி ணைப்பு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் ஆவார்கள்.

இந்த அதிகாரிகள் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், நெடுஞ்சாலைத்துறை, மின் வாரியம், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையுடன் ஒருங்கிணைந்து நிவாரணம், புனரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளை கண்காணிப்பார்கள். மேலும் அந்தந்த மண்டலங்களில் அன்றாடம் நடக்கும் பணிகள் குறித்த அறிக்கைகளை மாநகராட்சி ஆணையரிடம் அளிப்பார்கள்.

பருவமழை தொடர்பான புகார் களை சென்னை மாநகராட்சியின் 24 மணிநேர புகார் பிரிவு எண் -1913 மற்றும் மாநகராட்சி கட்டுப் பாட்டு அறை எண்களான (044) - 25619237 மற்றும் 25387235 ஆகியவற்றில் தெரிவிக்கலாம்.

கொசுக்களை கட்டுப்படுத்த 3500 ஊழியர்கள்

சென்னையில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் சூழ்நிலையில், சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை சில நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது. இதன்படி அனைத்து மண்டலங்களிலும் 24 மணி நேர மருத்துவசேவை அளிப்பதற்காக, ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தொற்றுநோய் மருத்துவமனை களில் 76 மருத்துவர்களும், 196 பணியாளர்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். குடிசைப் பகுதிகளில் 35 மருத்துவ முகாம்கள் நடத்தப் பட்டு 2,848 பேர் பயன் அடைந்துள் ளனர்.

குடிநீரில் நோய்கிருமிகள் ஏற்படுவதை தடுப்பதற்காக, வீடுகள் தோறும் குளோரின் மாத்தி ரைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் இரண்டு மாதத்திற்கு தேவையான கிருமி நாசினிகள் மற்றும் மருந்துகள் இருப்பில் வைக்கப் பட்டுள்ளன.

கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் 3,520 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மண்டலங்களிலும் 654 கைத்தெளிப்பான்கள் கொண்டு, தேங்கியுள்ள நீர்நிலைகள் மீது கொசுமருந்து தெளிக்கப்பட்டு கொசுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், குடிசைப் பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க புகைப் பரப்பி கருவிகள் மூலம் கொசுக்களை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x