Published : 05 Mar 2015 09:32 AM
Last Updated : 05 Mar 2015 09:32 AM

மலையாளம், ஒடிஸா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை எதிர்த்து வழக்கு: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மலையாளம், ஒடிஸா மொழி களுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது: உலகத்தில் உள்ள சுமார் 6 ஆயிரம் மொழிகளில் இதுவரை 6 மொழிகளுக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தமிழ், சமஸ்கிருதம், சீனம், ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழி கள்தான் செம்மொழி அந்தஸ்தை பெற்றுள்ளன. இரண்டாயிரம் ஆண் டுகள் பழமையும், இலக்கணம் மற்றும் இலக்கிய வளம் மிகுந்த மொழிகள் மட்டுமே செம்மொழி அந்தஸ்தைப் பெறமுடியும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொழியாக இருக்கும் பல மொழிகள் இலக்கணம் மற்றும் இலக்கிய வளம் இல்லாத காரணத்தால் செம்மொழி அந்தஸ்தைப் பெறமுடியவில்லை. கன்னடம், தெலுங்கு மொழிக ளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மலை யாளம், ஒடிஸா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி மத்திய அரசு அறிவிக்கை வெளி யிட்டுள்ளது. செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் விதித்துள்ள நிபந்தனைகளை இம்மொழிகள் பூர்த்தி செய்யவில்லை. மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப் பட்ட கருத்துகளை வெளிப்படுத்துவ தாக அறிவிக்கை அமையவில்லை. தங்களது விருப்பம்போல மேற் கண்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளனர்.

மலையாள மொழி தாமாக உருவான மொழியல்ல. அது, வேறு மொழியில் இருந்து வந்தது. எனவே, மலையாளம் மற்றும் ஒடிஸாவுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது. உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்த ரேஷ் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு வுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x