Published : 27 Sep 2016 09:10 PM
Last Updated : 27 Sep 2016 09:10 PM

முதல்முறையாக எம்.பி.யாகும் பாஜக தலைவர் இல.கணேசன்: மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேர்வாகிறார்

கடந்த 50 ஆண்டுகாலமாக பொதுவாழ்வில் இருக்கும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார்.

மத்தியப் பிரதேசத்தில் காலியாகும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அங்கு பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் அவர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

71 வயதாகும் இல.கணேசன், தஞ்சாவூரில் பிறந்தவர். பள்ளியில் படிக்கும்போதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தார். பள்ளி இறுதி வகுப்பை முடித்ததும் அவருக்கு வருவாய்த் துறையில் வேலை கிடைத்தது. 1970-ல் அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழிய ரானார். குடும்பத்தை விட்டும் வெளி யேறினார். இதனால், அவர் திருமணம் செய்து கொள்ள வில்லை.

நாகர்கோவில் நகர அமைப் பாளர், மதுரை மாவட்ட அமைப்பாளர், தென் தமிழக அமைப்பாளர், மாநில இணை அமைப்பாளர் என 21 ஆண்டுகள் அவர் ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியராக தமிழகம் முழுவதும் பணியாற்றினார். கன்னியாகுமரி மாவட்ட பாஜகவின் வளர்ச்சியில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.

1991-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து பாஜகவுக்கு அனுப்பப்பட்ட அவர், மாநில அமைப்பு பொதுச்செயலாளராக அரசியலில் அடியெடுத்து வைத் தார். அகில இந்தியச் செயலாளர், அகில இந்திய துணைத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், 2006 முதல் 2009 வரை தமிழக பாஜக தலைவராகப் பணியாற்றினார். தற்போது தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். 2009, 2014 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டி யிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், மத்தியப் பிர தேசத்தில் இருந்து மாநிலங்க ளவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் இருக்கும் அவர், முதல்முறையாக எம்.பி.யாவது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் பேசிய இல.கணேசன், ‘‘மாநிலங்களவை உறுப்பின ராவது மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து கட்சிப் பணியாற்றி னால் பாஜகவில் அதற்கான பலன் கிடைக்கும் என்பதற்கு இது உதாரணம். மத்தியப் பிரதேசத்தில் இருந்து எம்.பி.யானாலும் நான் தமிழகத் தைச் சேர்ந்தவன். தமிழகத்தின் நலன்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன்’’ என்றார்.

எம்.பி.யாகும் இல.கணேச னுக்கு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வா கிகள், தொண்டர்கள் மாலை அணி வித்து வாழ்த்து தெரி வித்தனர். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணனும் வாழ்த்து தெரிவித்துள் ளார். எம்.பி.யாக உள்ள இல.கணேசன் விரைவில் மத்திய அமைச்சராக இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x