Last Updated : 21 Mar, 2017 08:53 AM

 

Published : 21 Mar 2017 08:53 AM
Last Updated : 21 Mar 2017 08:53 AM

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருடன் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு குழு நாளை சந்திப்பு

ஹைட்ரோ கார்பன் எனும் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை, நெடுவாசல் போராட்டக் குழு நாளை (மார்ச் 22-ம் தேதி) சந்திக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க உள்ள தாக மத்திய அரசு பிப்.15-ம் தேதி அறிவித்தது. ‘இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் விவசாயத் துக்கு முன்னோடியாக திகழும் தங்களது பகுதி பாலைவனமாக மாறும். எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி பிப்.16-ம் தேதியில் இருந்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் ஆழ் துளைக் கிணறுகளை அமைத்து எரிபொருள் சோதனை மேற்கொள் ளப்பட்ட வடகாடு, நல்லாண்டார் கொல்லை, கோட்டைக்காடு, கருக் காகுறிச்சி, வானக்கண்காடு, கறம்பக்குடி பகுதி மக்களும் இந்த திட்டத்தை எதிர்க்கத் தொடங்கினர்.

நெடுவாசலில் நடைபெற்று வந்த தொடர் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர், மார்ச் 1-ம் தேதி போராட்டக் குழுவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் சந்தித்தார். அப் போது, இந்த திட்டத்தை தமிழகத் தில் செயல்படுத்த மாட்டோம் என உறுதி அளித்தார்.

மத்திய அமைச்சர் உறுதி

இதைத் தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் போராட்டக் குழுவின ருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆட்சியர் சு.கணேஷ் உள்ளிட்டோர் தமிழக முதல்வரின் உத்தரவு குறித்து நெடுவாசல் போராட்டக் குழுவினரிடம் விளக்கினர். இதைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட் டத்தைக் கைவிடுவதாக போராட்டக் குழு அறிவித்தது. இதற்கிடையில், அமைச்சர் தர்மேந்திர பிரதானை நாளை (மார்ச் 22) சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதை நாடாளுமன்றத்திலும் மத்திய அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

மத்திய அமைச்சரை சந்திப்பதற் காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் 10 பேர் கொண்ட குழு இன்று டெல்லிக்கு புறப்பட உள்ளது.

இதுகுறித்து எதிர்ப்பு குழுவைச் சேர்ந்த செந்தில்தாஸ் கூறியபோது, “ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து நன்கு அறிந்த 10 பேர் கொண்ட குழு சென்னையில் இருந்து மார்ச் 21-ம் தேதி டெல்லிக்கு புறப்பட உள்ளது. விவசாயம், மக்கள் வசிப்பிடங் களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தக்கூடாது என்ற கோரிக்கையை அமைச்சரிடம் தெரிவிக்க உள்ளோம். இந்த திட்டத்தை ரத்து செய்வதைத் தவிர, மத்திய அரசு சார்பில் வேறெந்த சமரசத்தை முன்வைத் தாலும் ஏற்கத் தயாராக இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x