Published : 25 Sep 2016 11:25 AM
Last Updated : 25 Sep 2016 11:25 AM

பொறியியல் பட்டதாரிகள், டெக்னீசியன்களுக்கு குவைத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய தொலைத்தொடர்புத் துறையின் குவைத் திட்டப் பணி களுக்கு ஓஎஸ்பி இன்ஜினீயர்கள், சிவில் இன்ஜினீயர்கள், சிவில் ஆட்டோகாட் ஆபரேட்டர்கள், வாகன ஓட்டுநர்கள், தொழி லாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஓஎஸ்பி மற்றும் சிவில் இன்ஜினீ யர் பணிக்கு பிஇ, பிடெக் (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்) பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 30-க்குள் இருக்க வேண்டும். தொலைத்தொடர்புத் துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். மாத ஊதியம் ரூ.56 ஆயிரம். சிவில் மேற்பார்வையாளர் பணிக்கு சிவில் இன்ஜினீயரிங் டிப்ளமா படித்தவர்கள் விண்ணப் பிக்கலாம். ஊதியம் ரூ.33,300.

பைபர் ஸ்பைலைசர்கள் பணிக்கு பிளஸ்-2 அல்லது டிப்ளமோ தேர்ச்சி அவசியம். 5 ஆண்டு பணி அனுபவமும் வேண் டும். வயது 35-க்குள் இருக்க வேண்டும். ஊதியம் ரூ.29,970. சிவில் ஆட்டோகாட் ஆபரேட்டர் பணிக்கு டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் வேண்டும். ஊதியம் ரூ.27,750. கனரக வாகன ஓட்டுநர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம். அதோடு குவைத் நாட்டில் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

தொழிலாளர் வேலைக்கு 10-ம் வகுப்பு முடித்து தொலைத்தொடர் புத் துறையில் 5 ஆண்டு அனுபவம் தேவை. ஊதியம் ரூ.17,760. அனைத்து விண்ணப்பதாரர்களும் 30 மாதங்கள் செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, பணி அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களையும் ஒரு புகைப்படத்தையும் omcresum@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தொடர்புக்கான தொலைபேசி எண்கள்: 044-22505886, 22502267 இணையதளம்: www.omcman power.com.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x