Published : 19 Feb 2017 06:20 PM
Last Updated : 19 Feb 2017 06:20 PM

பேரவையில் திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து 22-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்: ஸ்டாலின்

சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் 22-ம் தேதி உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவையில் 18-2-2017 அன்று ஆளும் அதிமுகவினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்தை, அவை மரபுகளுக்கு மாறாக, திட்டமிட்டு, காவல்துறை உயர் அதிகாரிகளை சட்டப்பேரவைக்குள் வரவழைத்து, பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்தி, கூண்டோடு வெளியேற்றினர்.

சட்டப்பேரவை விதிகளுக்கு புறம்பாக நிறைவேற்றிய ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள கழக மாவட்டத் தலைநகரங்களில் 22-2-2017 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும்.

கழக சார்பு அணிகள் நிர்வாகிகள், மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒத்தக் கருத்துடைய அமைப்புகளும் - பொது மக்களும் பெருந்திரளாக பங்கேற்று, இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x