Published : 05 Jan 2016 08:17 AM
Last Updated : 05 Jan 2016 08:17 AM

பெண்களை சிம்பு மதித்து நடக்க வேண்டும்: பீப் பாடல் வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவுரை

ஜாமீன் பெற தடையில்லை என்றும் உத்தரவு

*

‘பீப்’ பாடல் தொடர்பான வழக்கு களில் நடிகர் சிம்பு கீழ் நீதிமன் றத்தை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அவர் பெண்களை மதித்து நடக்க வேண் டும் என அறிவுரை வழங்கியது.

‘பீப்’ பாடல் விவகாரத்தில் தனக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத் தில் சிம்பு மனு தாக்கல் செய்திருந் தார். நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

சிம்பு தரப்பு வழக்கறிஞர் முத்துக் குமாரசாமி தனது வாதத்தில், ‘‘சிம்பு மீது பதியப்பட்ட அனைத்து பிரிவு களும் ஜாமீனில் வெளிவரக்கூடி யவை. அவர் தனிப்பட்ட முறையில் ‘பீப்’ போட்டு பாடிய பாடலை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிடவில்லை. ‘அவர் வெளி நாட்டுக்கு தப்பிவிடுவார். சாட்சி களை கலைப்பார்’ என அரசு தரப்பு கூறுகிறது. அதுபோன்ற செயல்களில் சிம்பு கண்டிப்பாக ஈடுபடமாட்டார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் கூறியதாவது:

‘பீப்’ என்ற ஒலி வரும் இடத்தில் உள்ள விடுபட்ட வார்த்தை என்ன என்பதை, பாடலைக் கேட்பவர்களே ஊகிக்கச் செய்வதுதான் ‘பீப்’ பாடல். ஆனால், இந்த பாடலில் அந்த வார்த்தை என்ன என்பதை அப்பட்டமாக எல்லோராலும் கேட்க முடிகிறது. அது பெண்களை ஆபாசமாக கொச்சைப்படுத்தியுள்ளது. இப்பாடலை எழுதியது, பாடியது, உருவாக்கம் செய்தது எல்லாமே சிம்புதான். ஆனால் பாடல் எப்படி இணையத்தில் வெளியானது என தனக்கு தெரியாது என்று அவர் கூறுவதை ஏற்கமுடியாது. இதற்காக அவரிடம் குரல் பதிவு சோதனை நடத்த வேண்டியது அவசியம். எனவே, அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘இந்த வழக்கு கள் அனைத்தும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டவை என்பதால், சம்பந்தப்பட்ட கீழ் நீதிமன்றத்தை சிம்பு தாராளமாக அணுகி ஜாமீன் கோரலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. அத்துடன், வரும் 11-ம் தேதி அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஆஜராகி போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

சிம்புவுக்கு அறிவுரை

பெண் வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இனி சிம்பு பெண்களை மதித்து நடக்க வேண்டும் என அறிவுரையும் வழங்கினார்.

ஆதரவாக இருந்தவர்களுக்கு டி.ராஜேந்தர் நன்றி

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, டி.ராஜேந்தர் சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திரையுலகினர் எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், தொந்தரவு தருவதுபோல நடந்துகொண்டனர். செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்றனர். அதில் நியாயம் இல்லாததால் சிம்பு மன்னிப்பு கேட்கவில்லை. என் மனைவி கண்ணீர் விட்டதைப் பார்த்து, மக்கள் பலரும் எங்களுக்கு ஆதரவு அளித்தனர்.

நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தோம். இந்த வழக்கில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது, தர்மம் வென்றிருக்கிறது. நீதி கிடைத்துள்ளது. எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கும், தமிழக மக்களுக்கும், சிம்பு ரசிகர்களுக்கும், ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர் களுக்கும், இறைவனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x