Last Updated : 27 May, 2016 08:38 AM

 

Published : 27 May 2016 08:38 AM
Last Updated : 27 May 2016 08:38 AM

புதுச்சேரியில் நாராயணசாமி, நமச்சிவாயம் இடையே போட்டி: முதல்வரை தேர்வு செய்வதில் குழப்பம்

தேர்தல் முடிவு வந்து ஒரு வார மாகியும் புதுச்சேரியில் புதிய முதல் வரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் மத்திய அமைச்சர் நாராய ணசாமி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர் தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 17 இடங்களை கைப்பற்றி பெரும் பான்மை பெற்றது. முதல் வர் பதவியை பிடிப்பதில் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி இடையே போட்டி நிலவுகிறது.

தற்போது டெல்லியில் தங்கி யுள்ள புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துவிட்டு முடிவுக்காக டெல் லியில் காத்திருக்கிறார். நாராயண சாமியும் கடந்த 2 நாட்களில் 2 முறை டெல்லிக்கு சென்று வந்துள் ளார். தனக்கு ஆதரவான எம்எல்ஏக் களுடன் நாராயணசாமி ஆலோ சனை நடத்தி வருகிறார். முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் நேற்று நாராயணசாமியின் இல்லத்துக்கு சென்று பேசினார். பின்னர் சில நிமிடங்கள் கழித்து இருவரும் வைத்திலிங்கம் வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினர்.

பதிலளிக்க மறுப்பு

ஆலோசனை நடத்திவிட்டு வெளியே வந்த அகில இந்திய பொதுச் செயலாளர் நாராயணசாமி, நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய வைத்திலிங்கம், ‘‘முதல்வர் பதவிக்கு தகுதியான நபரை கட்சி மேலிட பார்வையா ளர்கள் புதுச்சேரிக்கு வந்து தேர்வு செய்வார்கள். இன்னும் ஒரிரு நாட் களில் முதல்வர் தேர்வு செய்யப் படுவார். எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டுத்தான் முதல்வர் தேர்வு செய்யப்படுவார்” என்றார்.

இதற்கிடையே, புதுச்சேரிக்கு வந்திருந்த அகில இந்திய காங் கிரஸ் செயலாளர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டி யிடாத ஒருவரை முதல்வராக தேர்வு செய்வது என்பது காங்கிரஸ் கட்சி யில் இல்லாத பழக்கம் இல்லை. விரைவில் எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படுவார்” என்றார்.

தொண்டர்களும் தொடர்ந்து வாட்ஸ் அப், பேஸ்புக், போஸ்டர்கள் மூலம் தங்கள் விருப்பத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கின்றனர். நமச்சிவாயம் ஆதரவாளர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டும், போஸ்டர் ஒட்டியும் தங்கள் விருப் பத்தை வெளிப்படுத்தி வருகின் றனர். நாராயணசாமியை முதல்வ ராக குறிப்பிட்டு அவரது ஆதரவு எம்எல்ஏ படத்துடன் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

ஷீலா தீட்சித் நாளை வருகை

இதற்கிடையே காங்கிரஸ் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘தேர்தலில் வென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க மேலிட பார்வையாளர்களான டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் வரும் 28-ம் தேதி காலை புதுச்சேரிக்கு வர உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

அவர்கள் வந்து புதிய முதல் வர் யார்? என்று முறையாக அறி விப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முதல்வர் யார்? என்பதை தெரிந்து கொள்வதில் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x