Published : 26 Jun 2017 09:32 AM
Last Updated : 26 Jun 2017 09:32 AM

புதிய புறநகர் பஸ் நிலைய இடத்தில் ரூ.25 லட்சத்தில் சுற்றுச்சுவர்

ஊரப்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ் நிலைய இடத்தில் ரூ.25 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்க சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது.

கோயம்பேட்டில் உள்ள, புறநகர் பஸ் நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் வண்டலூர் - ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில், கிளாம்பாக்கம் கிராமத்தில் சிஎம்டிஏவுக்கு சொந்தமான 88 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில், சர்வதேச தரத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பஸ் நிலைய மாதிரி வரைபடத்தை, தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. மேலும் அனைத்து துறைகளிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஸ் நிலையத்துக்கான இடத்தை கழிவுநீரை விடும் இடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் ஆக்கிரமிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க அந்த இடத்தில் ரூ.25 லட்சத்தில் சுற்று சுவர் அமைக்க சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஊரப்பாக்கத்தில் அதிநவீன பஸ் நிலையம் அமையவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் சிஎம்டிஏ ஈடுபட்டு வருகிறது. இடத்தை பாதுகாக்க வேண்டியும், ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் சுற்றுச்சுவர் கட்டப்படவுள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் பங்கேற்கும் ஒப்பந்தக்காரர்களின் தகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு பணிகள் தொடங்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x