Published : 24 Apr 2014 12:00 AM
Last Updated : 24 Apr 2014 12:00 AM

பிரச்சாரத்தில் வசீகரித்த தமிழக தலைவர் யார்?- தி இந்து ஆன்லைன் கருத்துக் கணிப்பு முடிவு

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், தனது பேச்சாலும் அணுகுமுறையாலும் மக்களை வசீகரித்த தலைவர் யார்? என 'தி இந்து' ஆன்லைன் தளத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் போட்டியிடாமல், மாநிலம் தழுவிய அளவில் காங்கிரஸ் 'சாதனைகளை' பட்டி தொட்டியெங்கும் சளைக்காமல் பட்டியலிட்ட வகையில், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் பிரச்சாரம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பாஜகவினரைவிட, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடியின் 'பெருமைகளை' அங்கிங்கெனாதபடி அடுக்கிய வகையில் மதிமுக பொதுச் செயலர் வைகோ ஸ்கோர் செய்திருக்கிறார்.

இந்தத் தேர்தலின் 'பொழுதுபோக்காளராக' வலம் வந்தாலும், 'மக்களே...' எனத் தனித்துவம் காட்டியிருக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியில் இருந்து புதன்கிழமை மாலை 4 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 12,869 வாசகர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இதன்படி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 22% வாக்குக ளுடன் முதலிடத்தையும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெய லலிதா 20% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 12% வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சரு மான ஜி.கே.வாசன் 11%, தேமுதிக தலைவர் விஜயகாந்த் 9% வாக்குகளைப் பெற்று முறையே 4 மற்றும் ஐந்தாம் இடங்களைப் பெற்றனர்.

யாருடைய பிரச்சாரமும் தங் களை வசீகரிக்கவில்லை எனும் விதமாக, நோட்டா பட்டனுக்கு 10 சதவீத வாக்குகள் பதிவானது.

விஜயகாந்த் மனைவி பிரேம லதாவுக்கு 5% வாக்குகளும் திமுக தலைவர் கருணாநிதிக்கு 4% வாக்குகளும் கிடைத்தன. மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராம கிருஷ்ணன், அதிமுக கொள்கைப் பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோருக்கு தலா ஒரு சதவீத வாக்குகள் கிடைத்தன.

பாமக நிறுவனர் ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஆகியோருக்கு குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைக்கவில்லை.

மாநில அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளாததால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பெயர் இந்தக் கருத்துக் கணிப்பில் இடம் பெறவில்லை. மக்க ளின் பிரச்சி னைகளை இயல் பாக எடுத்துரைத்த விதத்தில் மு.க.ஸ்டாலினின் பேச்சு கவர்ந்ததாக வாசகர்கள் தெரிவித்திருந்தனர்.

‘டெம்ப்ளெட்' ரக பிரச்சாரமாக இருந்தாலும், காங்கிரஸ் மற்றும் திமுகவின் செயல்பாடுகளை சாடியதுடன், பாஜகவையும் மோடியையும் எதிர்த்துப் பேசியது, ஜெயலலிதா வின் பிரச்சாரத்துக்கு வலு சேர்த்த தாக வாசகர்கள் சிலர் குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x