Last Updated : 30 Mar, 2015 09:17 AM

 

Published : 30 Mar 2015 09:17 AM
Last Updated : 30 Mar 2015 09:17 AM

பிரசவ அறுவை சிகிச்சையின்போது குழந்தை ரத்தம் வீணாவதை தடுக்க புதிய முறை: புதுக்கோட்டை அரசு மருத்துவரின் ஆய்வில் கண்டுபிடிப்பு

பிரசவ அறுவைச் சிகிச்சை யின்போது குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி முறையை புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கண்டுபிடித்துள்ளார்.

பொதுவாக, மருத்துவமனை யில் அறுவைச் சிகிச்சை மூலம் தாயின் வயிற்றிலிருந்து குழந் தையை எடுத்த உடனேயே தாய், சேயை இணைக்கும் தொப்புள்கொடி துண்டிக்கப் படுகிறது. இதனால், குழந்தைக்குச் செல்லவேண்டிய சுமார் 80 மில்லி லிட்டர் ரத்தம் வீணாகிறது. இவ்வாறு ரத்தம் வீணாவதைத் தடுக்கவும், அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் சுமார் 200 தாய், சேயிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனையின் தலைமை அறுவைச் சிகிச்சை மருத்துவர் எம்.பெரியசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அறுவைச் சிகிச்சை செய்து தாயிடமிருந்து குழந்தையை எடுத்தவுடன் தொப்புள்கொடியின் இரு முனைகளும் துண்டிக்கப் படுகின்றன. இதனால், அதில் உள்ள சுமார் 80 மில்லி லிட்டர் ரத்தம் வீணாகிறது. இந்த ரத்தத்தைப் பாதுகாத்து, மீண்டும் அந்தக் குழந்தைக்கே செலுத்துவது குறித்து கடந்த ஓராண்டாக பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொப்புள்கொடி

குழந்தை பிறந்ததும் தொப் புள்கொடி துண்டிக் கப்பட்ட 100 பேரிடமும், தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தைக்குச் சென்ற பிறகு தொப்புள்கொடி துண்டிக்கப்பட்ட 100 பேரிடமும் ஆய்வு செய்யப் பட்டது.

அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்த பிறகு, தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் சுமார் 1 நிமிடத்தில் குழந்தைக்குச் சென்றுவிடும். இதனால் குழந்தையின் ரத் தம் வீணாவதில்லை. மேலும், குழந்தையின் எடை, ஹீமோ குளோபின், ஆற்றல் அதி கரிக்கிறது. தொப்புள்கொடி யில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தைக்குச் சென்றபிறகு 3 நிமிடங்களில் தாயிடமிருந்து நஞ்சுக்கொடி பிரிந்துவிடு கிறது. அதேபோல, கர்ப்பப் பையும் தானாகவே சுருங்கி விடுகிறது.

அறுவைச் சிகிச்சையின்போது, குழந்தையை எடுத்த அடுத்த 5 நொடிகளில் தொப்புள்கொடி துண்டிக்கப்படுவதால், தாயின் கர்ப்பப்பையில் ரத்தக் குழாய்கள் சுருக்கம் ஏற்படாமல், நீண்டநேரம் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதனால், கர்ப்பப்பை சுருங்குவது மற்றும் நஞ்சுக்கொடி பிரிவதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இதற்காக சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்த ஆய்வின்படி, அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்த பிறகு, தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தையைச் சென்றடைந்த பிறகு தொடர்பைத் துண்டிப்பதனால் தாய்-சேயின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையை சுகாதாரத் துறை இணை இயக்குநர் எஸ்.சையதுமொய்தீன் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வரங்கில் சமர்ப்பித்து, அரசுக்கும் அனுப்பியுள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x