Published : 21 Jul 2016 09:02 AM
Last Updated : 21 Jul 2016 09:02 AM

பியூஸ் மானுஷ் விவகாரத்தில் நடந்தது என்ன?

சேலம் மக்கள் குழுவின் பியூஸ் மானுஷ், சிறையில் தாக்கப் பட்டதை கண்டித்தும் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெறக் கோரியும் பல்வேறு அமைப்புகள் கைகோர்த்து ‘பியூஸ் மானுஷ் விடுதலை கூட்டியக்கம்’ என்ற அமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் வரும் 23-ம் தேதி உண்ணாநிலை போராட் டம் நடக்கவுள்ளது. சிறையில் தாக்குதல் நடத்தும் அளவுக்கு பியூஸ் என்ன செய்தார்?

அவர் செய்த சமூக காரியங் களில் முக்கியமானது கன்னங் குறிச்சி மூக்கனேரி சீரமைப்பு. ஒருகாலத்தில் குற்றச்செயல் களும் சாராய சாம்ராஜ்யமும் கொடி கட்டிப் பறந்த ஊர் அது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியின் பெரும் பகுதி ஆக்கிர மிக்கப்பட்டிருந்தது.

2009-ம் ஆண்டு அந்த ஏரியை தத்தெ டுத்த சேலம் மக்கள் குழு, ஓர் ஆண்டுக்குள்ளாக அதை முழு மையாக மீட்டெடுத்தது. ஏரிக்குள் சிறு தீவுத் திட்டுகள், அழகிய கரையோர நடைபாதைகள் அமைக்கப்பட்டன. சுற்றுலாத் தலம் போல மாறியது அந்தப் பகுதி. இதேபாணியில் அம்மாப் பேட்டை குமரகிரி ஏரி, அரிசி பாளையம் தெப்பங்குளம் ஆகிய வையும் சீரமைக்கப்பட்டன.

20 நீர்நிலைகள் மீட்பு

தருமபுரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டியிருக்கும் எர்ரப் பட்டி வறண்ட பூமி. 2007-ம் ஆண் டில் இங்கு கூட்டுறவு முறையில் பலருடன் கைகோத்து பட்டா நிலங்களை விலைக்கு வாங்கி னார் பியூஸ். 8 ஆண்டுகளில் 150 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. பட்டா நிலம் மற்றும் வனங்களில் 1.35 லட்சம் மரங்கள் நடப் பட்டன. குளங்கள், ஏரிகள், பண்ணைக்குட்டைகள், நீரோடை கள் உட்பட 20 நீர்நிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

‘தருமபுரி பண்ணைக் காட்டில் விருப்பம் இருப்பவர்கள் இயற்கை விவசாயம் செய்ய அனுமதிக் கிறோம். விதை, இயற்கை உரங் கள் உள்ளிட்ட இடுபொருட்கள் உள்ளூரிலிருந்தே பெற வேண் டும். உள்ளூர் மக்களை மட்டுமே வேலைக்கு பயன்படுத்த வேண் டும். மகசூலில் 20 சதவீதத்தை சேலம் மக்கள் குழுவுக்கு கொடுத்துவிட வேண்டும்’ என்கிறார் மானுஷ். ஜே.சி.குமரப்பா உள்ளிட்டோர் வலியுறுத்திய காந்திய பொரு ளாதாரம் தானே இது.

சூழலியல் பணிகளுடன் சில சமூகப் பணிகளையும் பியூஸ் மானுஷ் மேற்கொண்டார். இங்கே தான் பிரச்சி னைகள் முளைத் தன. ஏற்காடு மலையில் தனியார் எஸ்டேட்க ளில் சட்ட விதிமுறை களுக்கு மாறாக சில்வர் ஓக் மரங் கள் வெட்டப்படுவதை எதிர்த்தும், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பை கண்டித்தும் போராட்டங்களை நடத்தினார் பியூஸ். இதனால் பெரும் தலைகள் பலரும் பியூஸுக்கு எதிராக திரும் பினர். கல்வராயன், கவுத்தி மலைகளில் கனிமங்களை தோண்டி எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க முயற்சி நடந் தபோது அதையும் எதிர்த்தார்.

கடைசியாக பள்ளப்பட்டி ஏரியை தூர்வார பணிகளை மேற் கொண்டார். ஆனால், ஏரியை ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. இதற்கும் போராட்டம் நடத்தினார். இந்த விவ காரங்களில் சில அதிகாரிகளின் பெயரைச் சொல்லி கடுமையாக விமர்சித்தார். இதனால், பலர் அவர் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

இந்த நேரத்தில்தான் முள்ளு வாடி ரயில்வே மேம்பால விவகா ரத்தை கையில் எடுத்தார் பியூஸ். தனது பாணியில் அதிகாரிகளு டன் வாக்குவாதத்தில் ஈடுபட, இதற்காகவே காத்திருந்த காவல் துறை, பியூஸை கைது செய்து சிறையில் அடைத்தது. பியூஸ் மீது அதிருப்தியில் இருந்த பல்வேறு அதிகார தரப்பு களும் இந்த சந்தர்ப்பத்தை வசமாக பயன்படுத்திக் கொண்டன. இதன் காரணமாகவே சிறையில் அவர் மீதான தாக்குதல் நடந்திருக்க லாம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x