Published : 19 Feb 2017 01:39 PM
Last Updated : 19 Feb 2017 01:39 PM

பிப்.19-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

சட்டப்பேரவை நிகழ்வுகள்: செயலாளரிடம் விளக்க அறிக்கை கோரினார் ஆளுநர்

*

கடும் அமளிகளுக்கு மத்தியில் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்களும், எதிராக 11 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். சட்டப்பேரவையில் நடந்த பெரும் ரகளை, திமுகவினர் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டது, நம்பிக்கை வாக்கெடுப்பு முறை, சபாநாயகர் நடவடிக்கைகள் என பேரவை நிகழ்வுகள் குறித்த விமர்சனங்களும் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நிகழ்நேரப் பதிவு நிறைவு

*

8.45 pm: சனிக்கிழமை நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீனிடம் ஆளுநர் விளக்க அறிக்கை கேட்டுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை அங்கீகரிக்கக் கூடாது. அதை ரத்து செய்ய வேண்டும், மறு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விளக்க அறிக்கை கேட்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

8.30 pm: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாடகை நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவில்பட்டியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தற்போதைய முதல்வர் அமர்ந்திருப்பது ஒரு வாடகை நாற்காலி போன்றது. அது நிரந்தரம் அல்ல. இந்த ஆட்சி நீடித்திருக்க வேண்டும். எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்'' என்றார்.

8.15 pm: திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கண்ணியம் காத்து அவையிலும், வெளியிலும் களப்பணி ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன் விவரம்: >சபாநாயகர் இருக்கையில் திமுக எம்.எல்.ஏக்கள் அமர்ந்ததை ஏற்கவில்லை: ஸ்டாலின்

7.30 pm: தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் ஜனநாயகத்துக்கு இழுக்கானது. அரசியல்வாதிகளின் இத்தகைய நடத்தையால் அரசியல் முறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் அபாயம் ஏற்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வேதனை தெரிவித்துள்ளார். அதன் விவரம்: >தமிழக சட்டப்பேரவையில் நிகழ்ந்தது ஜனநாயகத்துக்கே இழுக்கானது: வெங்கய்ய நாயுடு வேதனை

6.15 pm: தமிழகத்தின் பிரச்சினைகளை நினைவில் கொண்டிருப்பது மட்டுமே முதல்வரின் பணி அல்ல. அவற்றை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். அதன் விவரம்: >தமிழகப் பிரச்சினைகளை நினைவில் கொண்டிருப்பது மட்டுமே முதல்வரின் பணி அல்ல: அன்புமணி

5.00 pm: பேரவைக்கான மாண்பை திமுகவினர் சீர்குலைத்துவிட்டனர்: நவநீதகிருஷ்ணன் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவைக்கான மாண்பை திமுகவினர் சீர்குலைத்துவிட்டனர். திட்டமிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுகவினர் முற்பட்டனர் என்று நவநீதகிருஷ்ணன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். அதன் விவரம்: >பேரவையில் திமுகவுக்கு ஓபிஎஸ் அணி துணை போனது: அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் குற்றச்சாட்டு

4.15 pm: அதிமுகவின் அதிகாரப் போட்டி, திமுகவின் அதிகார வேட்கை, பாஜகவின் புறக்கடை முயற்சி போன்றவற்றால் தமிழக மக்களின் மிக முக்கியமான பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் புறந்தள்ளப்பட்டுள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். அதன் விவரம்: >அதிகாரப் போட்டியில் அதிமுக, அதிகார வேட்கையில் திமுக, புறக்கடை முயற்சியில் பாஜக: ஜி.ராமகிருஷ்ணன் தாக்கு

4.00 pm: ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மைத்ரேயன், மாஃபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

3.30 pm: தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற சட்டவிரோத அராஜகங்கள் குறித்து இந்திய குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க உள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதன் விவரம்: >பேரவையில் நடைபெற்ற சட்டவிரோத நிகழ்வுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார்: ஸ்டாலின்

2.30 pm: நடுநிலையோடு செயல்பட வேண்டிய சட்டப்பேரவை தலைவர், சாதியை முன்னிறுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்குரியது: விஜயகாந்த்

கட்சிகளுக்கும் ஜாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு செயல்பட வேண்டிய சட்டப்பேரவை தலைவர், சாதியை முன்னிறுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தயாராகி விட்டார்கள் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். அதன் விவரம்: >அதிகாரப் போட்டியில் அதிமுகவும், திமுகவும் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன: விஜயகாந்த் குற்றச்சாட்டு

1.55 pm: சட்டப்பேரவையில் மறுவாக்கெடுப்பு நடத்த ஓபிஎஸ் தரப்பு ஆளுநரிடம் வலியுறுத்தல்

நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும். சட்டப்பேரவையில் மறுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தியதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். அதன் விவரம்: >நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய ஆளுநரிடம் வலியுறுத்தினோம்: மாஃபா பாண்டியராஜன்

1.25 pm: 'பினாமி' ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை நிலைப்பெறச் செய்யும்வரை நமது போராட்டம் ஓயப்போவதில்லை: ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளே இல்லாத சபையில், பெங்களூரு சிறையில் உள்ள ஊழல் குற்றவாளியின் 'பினாமி' முதல்வர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்திருப்பது வெட்கக்கேடான செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதன் விவரம்: >'பினாமி' முதல்வர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்திருப்பது வெட்கக்கேடான செயல்: ஸ்டாலின்

1.20 pm: ஆளுநருடன் ஓபிஎஸ் சந்திப்பு

1.15 pm: தமிழகம் முழுவதும் வரும் 22-ம் தேதி திமுகவினர் உண்ணாவிரதம்: மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் 22-ம் தேதி உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் விவரம்: >பேரவையில் திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து 22-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்: ஸ்டாலின்

1.10 pm: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை சந்திக்க புறப்பட்டார்

1.00 pm: எதிர்க்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது முரண்பாடானது: திருச்சி சிவா

சட்டப்பேரவையில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டார் என்று திருச்சி சிவா எம்.பி. குற்றம்சாட்டினார். >சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டார்: திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டு

12.45 pm: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை சந்திக்க உள்ளார்

12.30 pm: திருச்சி சிவா தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் சந்திப்பு

12 pm: நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ

நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டப்பேரவையிலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அதன் விவரம்: >நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ

11.30 am: சசிகலாவின் கீழ் இயங்கும் ஆட்சி தொடரவே கூடாது: தீபா

11 am: ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சந்திப்பு.

சட்டப்பேரவையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை நிமித்தமாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். இந்த சந்திப்பு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

10.30 am: ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

10.15 am: அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது

9.45 am: ராஜ்பவனில் ஆளுநர் வித்யாசாகர் ராவை காலை 11 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

( மெரினாவில் சனிக்கிழமை ஸ்டாலின் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற கனிமொழி | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன் )

9.30 am: மெரினாவில் போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2,000 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு. அதன் விவரம்: >மெரினாவில் போராட்டம் நடத்திய ஸ்டாலின் உட்பட 2000 பேர் மீது வழக்குப் பதிவு

முந்தைய நிகழ்வுகள்:

>>> முன்னதாக பேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். அதன் விவரம்: >எதிர்க்கட்சியினர் இல்லாத பேரவை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி

>>> பேரவையில் அரசின் பெரும் பான்மை நிரூபிக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை ஆளுநருக்கு பேரவைச் செயலர் ஜமாலுதீன் அனுப்பி வைத்தார். அதன் விவரம்: >அரசின் பெரும்பான்மை நிரூபிக்கும் தீர்மானம் குறித்த அறிக்கை: ஆளுநருக்கு அனுப்பினார் பேரவைச் செயலர்>

>>> ‘சட்டப்பேரவை காவலர்களால் தாக்கப்பட்டேன்’ என்று கூறி கிழிந்த சட்டையுடன் பேரவையில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின், சாலையில் நின்று மக்களிடம் முறை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் விவரம்: >‘சட்டப்பேரவை காவலர்களால் தாக்கப்பட்டேன்’: மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

>>> மக்களுக்கு மாபெரும் துரோகத்தை செய்துவிட்டு, சசிகலா அணிக்கு ஆதரவு அளித்தது சரியா என்று, எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிக்கு திரும்பினால்தான் தெரியும். அவர்களை தொகுதி மக்கள் கேள்வி கேட்கப்போவது உறுதி என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதன் விவரம்: >சசிகலா அணிக்கு வாக்களித்தவர்களை தொகுதி மக்கள் கேள்வி கேட்பது உறுதி: ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

>>> ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர்களை ஏற்கமாட்டோம் என்று கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண் குமார் கூறினார். அதன் விவரம்: >எங்களது எதிர்ப்பு காரணமாகவே சசிகலா 3 முறை விடுதிக்கு வந்தார்: கோவை வடக்கு எம்.எல்.ஏ. அருண்குமார் தகவல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x