Published : 23 Jun 2017 08:47 AM
Last Updated : 23 Jun 2017 08:47 AM

பாலில் கலப்படம் செய்வோர் கடுமையாக தண்டிக்கப்படுவர்: பேரவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை

பாலில் கலப்படம் செய்வோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேரவையில் எச்சரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பாலில் கலப்படம் செய்யப்படுவது தொடர்பாக துணைக் கேள்வி எழுப்பப்பட்டது. அதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “பாலில் கலப்படம் செய்யப் படுவதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” என்று வினவினார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசும் போது, “பாலில் கலப்படம் செய் வோர் மீது நடவடிக்கை எடுத் தால் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன் றத்துக்குச் செல்வதாக அமைச்சர் கூறுகிறார். நீதிமன்றத்துக்கு சென் றாலும் கடும் நடவடிக்கை மூலம் பால் கலப்படத்தை தடுப்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து பால் கலப் படம் தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விளக்கமாக பதில் அளித்தார். அதன் விவரம்:

ஒரு சில தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பாலில் ரசாயன கலப்பு இருப்பதாக எனக்கு கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப் படையில் ஒரு சில பால் மாதிரி களை பரிசோதனை செய்ய கடந்த மே 26-ம் தேதி உத்தரவிடப்பட்டது. பால் மாதிரிகளில் ரசாயன கலப்பு இருப்பதும், அவை பாதுகாப் பற்றவை என்பதும் பரிசோத னையில் கண்டறியப்பட்டது. மேலும் அந்த மாதிரிகள் விரிவான தரப் பரிசோதனைக்கு மைசூர் மற்றும் புனேயில் உள்ள மத்திய அரசின் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின்படி அந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அதுகுறித்த முழு விவரங்களையும் தெரிவிக்க இயலாது.

உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ், 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதிமுதல் கடந்த மே 31-ம் தேதி வரை 32 மாவட்டங்களில் 886 பால் மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் பாதுகாப்பற்ற தன்மை கொண்ட பால் மாதிரிகள் இல்லாவிட்டாலும், 187 பால் மாதிரிகள் தரம் குறைந் தவையாக இருந்தன. இது தொடர் பாக 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 81 வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு, தண்டத் தொகையாக ரூ.10 லட்சத்து 26 ஆயிரத்து 300 வசூலிக்கப் பட்டுள்ளது.

பால் கலப்பட பரிசோதனைக் காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர அதிகார அமைப்பு, தமிழகத்துக்கு ஒரு மின்னணு பால் பரிசோதனை கருவியை வழங்கியுள்ளது. அதன்மூலம் தமிழகத்தில் பல்வேறு இடங் களில் பால் மாதிரிகள் பரி சோதிக்கப்பட்டு வருகின்றன. பால் மாதிரிகள் எடுக்கப்போகி றோம் என தெரிந்ததும் நீதி மன்றத்தை நாடி தண்டனையில் இருந்து தப்பிக்கிறார்கள். அதனால்தான் மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் ஊடகங்களுக்கு நான் பேட்டி அளித்தேன். மற்றபடி எந்த நிறுவனத்தையும் பழிவாங்கவோ, மிரட்டுவதற்காகவோ பேட்டி கொடுக்கவில்லை. பாலில் கலப்படம் செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் 200 கல்லூரிகளில் ஆவின் பாலகம் திறக்கப்படவுள் ளது. அதற்காக 150 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டன. அதுபோல அரசு மருத்துவமனைகளிலும் ஆவின் பாலகம் தொடங்கப்படும் என்றார் அமைச்சர் கே.டி.ராஜேந் திர பாலாஜி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x