Published : 24 Apr 2014 07:55 AM
Last Updated : 24 Apr 2014 07:55 AM

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ‘நாக்’ தர அந்தஸ்து கட்டாயம்: பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகளைப் போல, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் “நாக்” (National Assessment and Accreditation Council-NAAC) தர அந்தஸ்தை கட்டாயமாக்கி யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

“நாக்” என்று அழைக்கப்படும் தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் அமைப் பானது பல்கலைக்கழக மானியக்குழு வின் (யுஜிசி) ஓர் அங்கம் ஆகும். இது, நாடு முழுவதும் உள்ள கலை- அறி வியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங் கள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து ஏ, பி, சி., டி என தர அந்தஸ்து வழங்குகிறது.

இதற்கு குறிப்பிட்ட கல்வி நிறுவனத் தின் செயல்பாடுகள், பாடத்திட்டம், கற்பித்தல், கற்றல் மதிப்பீடு, ஆசிரியர் களின் தரம், ஆராய்ச்சி, உள்கட்ட மைப்பு வசதி, நிர்வாகம், நிதிநிலை, மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் குறிப்பிட்ட தர அந்தஸ்து வழங்கப்படும். இது 5 ஆண்டுகளுக்கு செல்லும். குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் நிறை-குறைகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளவும், யுஜிசி உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து நிதி உதவி பெறவும் நாக் தர அந்தஸ்து பெரிதும் உதவும்.

இந்த நிலையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைப் போல, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் நாக் தர அந்தஸ்தை கட்டாயமாக்கி யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் தர அந்தஸ்துபெறத் தகுதியுள்ள கல்லூரிகளை கணக்கெடுக்கும் பணியில் மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாக் அறிவிப்பு

தமிழகத்தில் 41 அரசு பாலிடெக் னிக் கல்லூரிகள், 34 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 406 தனியார் பாலிடெக்னிக்குகள் உள்ளன. இவற்றில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் டிப்ளமா படிப்பு படிக்கின்றனர். நாக் அமைப்பிடமிருந்து வந்த அறிவிப்பை அடுத்து, நாக் தர அந்தஸ்து பெறத் தகுதியுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளின் தகவல் தொகுப்பை தயாரிக்கும் பணியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

பாலிடெக்னிக்குகளுக்கு உத்தரவு

இதுதொடர்பாக அனைத்து பாலிடெக்னிக் முதல்வர்களுக்கும் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் அனுப்பியுள்ள உத்தர வில், கல்வி நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு, வழங்கப்படும் படிப்புகளின் தரம், அவை தர அங்கீகாரம் பெற்ற படிப்புகளா என்பன உள்ளிட்ட விவரங்களை உடனடியாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x